உயிர் போகிற மேட்டர்.. விண்வெளியில் நடந்த 7 மணி நேர ஆபரேஷன்! அசத்தி காட்டிய நாசா!

  • வாஷிங்டன்: பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில், உயிர் பற்றி கொஞ்சமும் பயமில்லாமல்.. விண்வெளி வீரர்கள் 7 மணி நேரம் போராடி முக்கியமான ஆபரேஷன் ஒன்றை முடித்திருக்கிறார். இது விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட காலத்திற்கு மனிதர்கள் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து எல்லாம் ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    Advertisement

    உயிருக்கு ஆபத்து

    இப்படி போகும் ராக்கெட்டை, விண்வெளி மையத்துடன் இணைக்கும் வேலையை ரோபோடிக் கை செய்கிறது. பிரச்சனை என்னவெனில், கடந்த 25 ஆண்டுகளாக எந்த தொந்தரவும் கொடுக்காமல் இயங்கி வந்த இந்த கை, கடந்த மே மாதம் ரிப்பேர் ஆகிவிட்டது. இந்த கை வேலை செய்யவில்லை எனில், விண்வெளி வீரர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

    பூமியிலிருந்து தண்ணீர், உணவு, மருந்து எதுவும் அங்கு கொண்டு போக முடியாது. எனவே இந்த கை உடனே சரி செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இதற்காக நாசாவின் மார்க் வந்தே ஹே மற்றும் ஸ்காட் டிங்கிள் என 2 வீரர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

    Advertisement

    சாதனை செய்த வீரர்கள்

    மணிக்கு 27,000 கி.மீ வேகத்தில் பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில், ரத்தத்தை உறைய வைக்கும் குளிரில், 2 பேர் சேர்ந்து சுமார் 90 கிலோ எடை கொண்ட ரோபோட்டிக் கையை நகர்த்தி ரிப்பேர் செய்ய வேண்டும். இதுதான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆபரேஷன்.

    ஆபத்து இதுதான்

    தேவையான பாதுகாப்பு உடைகளை அணிந்துக்கொண்டு 2 வீரர்களும் களத்தில் இறங்கினர். மொத்தம் 7 மணி நேரம் 25 நிமிடங்கள் இந்த ஆபரேஷன் நீடித்தது. இந்த வேலையை செய்யும்போது ஒரு சின்ன போல்டை மிஸ் செய்துவிட்டால் கூட.. அது திரும்ப வந்து.. துப்பாக்கி தோட்டாவை விட 10 மடங்கு வேகத்தில் விண்வெளி வீரர்களை தாக்கும். இது நடந்தால், அடுத்த ஒன்றிரண்டு விநாடிகளில் பாதிக்கப்பட்ட விண்வெளி வீரர் உயிரிழந்துவிடுவார்.

    Advertisement

    எனவே எதையும் மிஸ் செய்யாமல், கச்சிதமாக இந்த வேலையை செய்ய வேண்டும். 2 வீரர்களும் திட்டமிட்டபடி நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வேலையை பக்காவாக முடித்திருக்கிறார்கள்.

    பிரச்சனை ஓவர்

    ரோபோட்டிக் கையின் பழைய மணிக்கட்டுப் பகுதியை அகற்றிவிட்டு, புதிய பகுதியை வெற்றிகரமாகப் பொருத்தினர். இதன் மூலம் விண்வெளி நிலையத்தின் ரோபோடிக் செயல்பாடுகள் மீண்டும் முழுத்திறனுடன் இயங்கத் தொடங்கியுள்ளன.

    சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்புப் பணிகளில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது. இந்த வெற்றிகரமான பழுதுபார்ப்புப் பணி மூலம், விண்வெளி நிலையத்திற்கு வரும் அடுத்தடுத்த விண்கலங்களை கையாள்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

    Topics: #space #nasa #us

    English Summary

    NASA: At the International Space Station, located approximately 400 km above Earth, astronauts have completed a critical operation after a seven-hour struggle—showing no fear for their lives. This is being hailed as a new milestone in the history of space exploration.