தலையில் இடியை இறக்கிய தேர்தல்.. ஈரான் விஷயத்தில் சட்டென் பேக் அடித்த டிரம்ப்! உஷாரான அமெரிக்கர்கள்

  • வாஷிங்டன்: அமெரிக்க இடைத்தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது. ஆரம்பம் முதல் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஈரான் விஷயத்தில் டிரம்ப் முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.

    Advertisement

    அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பேச்சுகள் அடிபட்டன. டிரம்ப் அப்படிப்பட்ட ஆள்தான். நானே ராஜா, நானே மந்திரி.. தான் புடிச்ச முயலுக்கு மூனு கால் என சொல்வது பழைய ஸ்டைல்.. முயலுக்கு காலே இல்லை, இறக்கைதான் இருக்கு என்றாலும் அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். எனவே ஈரான் மேல எப்போ வேணாலும் குண்டு போடலாம் என்று பலரும் பயந்திருந்தனர்.

    Advertisement

    ஆனால், இது குறித்த டிரம்பின் ரியாக்ஷ்ன் சற்றே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. Financial Times என்கிற செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ஈரான் உடன் தற்போதைக்கு போருக்கு போகும் ஐடியா இல்லை என்று கூறியிருக்கிறார்.

    ஈரானை, உடனடியாக தாக்கும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் தற்போதைக்கு இல்லை என்று, அவர் தெளிவுபடுத்தி உள்ளார். ஈரான் உடனான தற்போதைய நிலை, திருப்தியாக இருப்பதாகவும்.. நாம் விரும்பும் அனைத்தும் நமக்கு கிடைப்பது போல் தோன்றுகிறது என்றும் கூறியிருக்கிறார். இந்த வார இறுதியில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம்.. என இஸ்ரேல் பிரதமர் மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தது பற்றி ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் தயாராக இருக்கிறேன், நாங்களும் தயாராக இருக்கிறோம், தேவைப்பட்டால் தாக்குதல் நடத்த ஆயுதங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால், அதற்கான அவசியம் இல்லாமல் போகலாம் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ஈரானுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்ந்து, பணவீக்கமும் எக்கச்சக்கமாக எகிறியது. இதனால் வாக்காளர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிந்து கருத்து கணிப்புகள் வெளியான நிலையில், அதில் டிரம்பின் செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. பெரும்பாலான வாக்காளர்கள், டிரம்பின் செயலால்தான் எரிபொருள் விலை உயர்வும், அதனால் விலைவாசி உயர்வும், ஊழலும் ஏற்பட்டிருக்கிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கின்றனர்.

    இவர்களுக்கு பதில் அளித்துள்ள டிரம்ப், இடைக்கால தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று உறுதி கொடுத்திருக்கிறார். போருக்கு முந்தைய காலகட்டத்தை விட.. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அதிக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்வதாகவும், அமெரிக்காவின் துறைமுக முற்றுகை ஈரானின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது ஒரு சிறந்த சூழ்நிலை என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்க ஈரானுடன் உண்மையிலேயே போரிடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

    Advertisement

    அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சு வார்த்தை தொடரும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால்.. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 டாலருக்கு குறைந்து ஒரு பேரல் 104 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. இருப்பினும், நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவின் உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இருக்கிறது. இந்த பின்னணியில்தான் தற்போது போர் குறித்து டிரம்ப் பேசியிருப்பது நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

    English Summary

    Donald Trump: Voting in the US midterm elections concluded yesterday, and the counting of votes is now underway. From the outset, President Donald Trump’s Republican Party has faced significant setbacks. Meanwhile, Trump has made a major decision regarding Iran.