வாஷிங்டன்: சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் பெண் தொழிலதிபருடன் ரகசிய உறவில் இருந்ததை நிவிடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும் நிவிடியா சிஇஓ எழுதிய மின்னஞ்சலில் உருக்கமாக கூறியுள்ளார். நிவிடியா விவகாரம் அமெரிக்காவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழில் நுட்ப நிறுவனம் நிவிடியா. கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் உலகின் அதிக மதிப்பு மிக்க நிறுவனங்களில் டாப் பட்டியலில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, சிப் உற்பத்தி உள்ளிட்டவற்றில் கொடிகட்டி பறக்கும் இந்த நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் ஜென்சன் ஹுவாங். 63 வயதான இவர் மீது தற்போது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்து சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜென்சன் ஹுவாங்கை வெளிநாட்டை சேர்ந்த உளவாளிகள் குறிவைத்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக நிவிடியா நிறுவனமும் தனது உள்விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான், சீனாவை சேர்ந்த பெண் ஒருவருடன் தனக்கு கள்ள உறவு இருந்ததாக ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தனது மனைவிக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இமெயிலில் கூறியதாவது:- நான் எனது குடும்பம் மற்றும் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளேன். நான் எனது மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன். எனது செயல்பாடுகள் மனைவியையும் குழந்தைகளையும் காயப்படுத்தியிருக்கும். நான் செய்தவற்றிற்கு எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது. நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனது வாழ்க்கையில் எனது குடும்பம் மிகுந்த அன்பையும் ஆதரவையும் வழங்கியது. எனது நேர்மை மற்றும் விசுவாசத்தை பெற அவர்களுக்கு தகுதி உள்ளது. ஆனால், நான் அவர்களை ஏமாற்றிவிட்டேன். நாங்கள் இணைந்து உருவாக்கிய வாழ்க்கையையும் பாதித்துவிட்டேன். நான் செய்த செயல்களுக்கும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட மனவேதனைக்கும் முழுப் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இதனால் எழும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது என்பதை நான் உணர்வேன். காலப்போக்கில் எனது குடும்பம் இதில் இருந்து மீண்டு வரும் என்றும் அவர்களின் நம்பிக்கையையும் நான் பெறுவேன் என்றும் நான் நம்புகிறேன். தேசிய பாதுகாப்பு விவகாரத்தை பொறுத்தவரை, நிவிடியா குழும இயக்குநர்கள் சுதந்திரமான விசாரணையை தொடங்கியுள்ளனர். நான் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். எனது தேசத்தையும் நிறுவனத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நிவிடியா நிறுவனத்தையும் அமெரிக்காவின் தேச பாதுகாப்பையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளேன். அமெரிக்கராக இருப்பதில் பெருமை அடைகிறேன்" என்று மனம் திறந்து கடிதம் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் தேதி நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்திதான் நிவிடியா நிறுவனத்தை உலுக்கியது. அதாவது சீன பெண் தொழிலதிபரும், சிங்கப்பூரை சேர்ந்த டேட்டா செண்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரியுமான ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு, நிவிடியாவின் மேம்பட்ட ஏ.ஐ. சிப்கள் மற்றும் ரகசியத் தகவல்களை சீனாவின் பீஜிங்கிற்கு அனுப்பி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையும் இதனை கண்டறிந்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து, விசாரணையை நிவிடியா தொடங்கியுள்ளது. இதற்கிடையே, விசாரணை காலத்திலும் ஜென்சன் ஹுவாங் தலைமை செயல் அதிகாரியாகவே நீடிப்பார் என்று நிவிடியா போர்டு தெரிவித்துள்ளது.கள்ளத்தொடர்பை ஒப்புக்கொண்டார்
என் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன்
முந்தைய சம்பளம் ரூ.2.80 லட்சம்னு சொல்லி.. சிஇஓ பதவிக்கே சென்ற 'பலே' கில்லாடி.. ராஜினாமாவின்போது சிக்கியது எப்படி?
நான் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது
சீன பெண்னுடன் தொடர்பா?
அடேங்கப்பா.. ரூ.4,80,00,000 கோடி.. மீண்டும் சாதித்துக்காட்டிய Nvidia ஜென்சன் ஹுவாங்!