மளமளவென சரிந்த என்விடியா சிப் ஷேர்! அமெரிக்காவில் ஆட்டம் காணும் AI உலகின் ராஜா!

  • வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் சிஇஓ, திருமணத்தை மீறி ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் என்றும், அந்த பெண் சீனாவின் உளவாளி எனவும் அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றன. எனவே இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக.. தற்போது அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளன.

    Advertisement

    என்விடியா சிஇஓ, ஜென்சன் ஹுவாங், வெளிநாட்டு உளவு அமைப்பின் டார்கெட்டாக இருந்தார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தியை வெளியிட்டிருந்தது. இது அந்நிறுவனத்திற்குள் பெரிய புயலை கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நிறுவனம் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5% வரை குறைந்துள்ளன.

    Advertisement

    கடந்த மாதம் தான் பங்குச் சந்தையில் இந்த நிறுவனம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால், இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் பங்குகள் சரிந்திருக்கின்றன.

    உலகிலேயே மிக முக்கியமான, டேட்டா சென்டர்கள் மற்றும் கம்ப்யூட்டிங் சிஸ்டங்களை இயக்குவது இந்த நிறுவனத்தின் பிராசசர்கள்தான். இப்படி இருக்கையில், இந்த சர்ச்சை ஒட்டுமொத்த ஏஐ சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக, ஜென்சன் ஹுவாங் வணிக நிர்வாகி ஒருவருடன் திருமணத்தை மீறிய தொடர்பை வைத்திருந்தார். இதை அவர வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த பெண் சீன அரசுக்காக அமெரிக்க தொழில்நுட்ப தகவல்களை திருடும் நபர் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தை 'தி நியூயார்க் டைம்ஸ்' செய்தியாக வெளியிட்டிருந்தது. இதன் காரணமாகவே, தற்போது நிறுவனத்தின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், விசாரணை நடத்தினாலும்.. விசாரணை முடிவை பொறுத்து ஜென்சனை சிஇஓ பதவியில் இருந்து நீக்க அல்லது விலக்க மிகச் சிறிய வாய்ப்புகள் தான் இருக்கும். ஆனால், என்விடியா நிறுவனத்தை பொறுத்தவரை ஜென்சனுக்கு பதிலாக மற்றொருவரை அந்த பதவியில் வைப்பது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் பங்குகள் சரிந்திருப்பது ஏஐ நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Topics: #china #us

    English Summary

    Nvidia: US intelligence agencies have raised suspicions that the CEO of Nvidia was involved in an extramarital affair with a woman who is allegedly a Chinese spy. Consequently, an investigation has been launched, which has led to a decline in the company's stock.