இந்தியா சொன்னது ஒன்று.. டிரம்ப் செய்தது வேறு! அமெரிக்க அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ட்விஸ்ட்

  • டெல்லி: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை. உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி பிரதமர் மோடி பிரஸ் மீட் இருக்காது. ஒருவேளை அப்படியே நடந்தாலும் செய்தியாளர்கள் கேள்விக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படும். இதற்கிடையே அமெரிக்காவில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பக்கூடாது என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    டிரம்ப் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போதிலும், பிரஸ் மீட்டில் அதை மறுந்துவிட்டு, கேள்விகள் இருக்கிறதா என செய்தியாளர்களிடம் கேட்டுள்ளார். இதனால் திடீரென செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்ததாகவும் சுமார் 45 நிமிடங்கள் அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ஜி7 உச்சி மாநாடு

    பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின் இடையே ஜூன் 17ஆம் தேதி மோடி- டிரம்ப் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு முன்னதாக, டிரம்ப் மற்றும் செர்ஜியோ கோர் சில விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது இந்தியா தரப்பில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட உள்ளன என்று டிரம்ப் கேட்டதாக கோர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் கோரிக்கைகள் என்ன என்றும் டிரம்ப் கேட்டதாக அவர் கூறினார்.

    Advertisement

    ஒரே கோரிக்கை

    அதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஒரே ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கோர் தெரிவித்தார். இது தொடர்பாக கோர் மேலும் கூறுகையில், "ஊடகங்களை உள்ளே அனுமதிக்கலாம். ஆனால் முழுமையான செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டாம் என்பதுதான் அந்த கோரிக்கை. அதாவது பிரஸ் இருப்பார்கள் ஆனால், கேள்விகளை கேட்க அனுமதி இல்லை. இந்தியா தனது இந்த கோரிக்கையை டிரம்பிடம் நேரடியாக தெரிவித்தனர். அதிபர் டிரம்பும் ஓகே பிரச்சனையில்லை என கூறியிருந்தார்.

    கேள்விகள்

    மோடி டிரம்ப் சந்திப்பு தொடங்கியபோது ஏராளமான செய்தியாளர்கள் அங்கிருந்தனர். சுமார் 50 கேமராக்கள் இருந்தது. இரு தலைவர்களும் சில நிமிடங்கள் தொடக்க உரைகளை வழங்கினர். அப்போது டிரம்ப் திடீரென செய்தியாளர்களை நோக்கி, ஏதாவது கேள்விகள் இருக்கிறதா? கேட்டுவிட்டார். டிரம்பின் அந்த ஒரு கேள்வி அனைத்தையும் மாற்றிவிட்டது. அது பிறகு 45 நிமிட செய்தியாளர் சந்திப்பாக மாறியது. எல்லா விஷயங்களும் கேட்கப்பட்டன" என்றார்.

    Advertisement

    இந்த தகவல் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் கோர் பகிர்ந்த நிலையில், இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் கேள்விகளை எதிர்கொள்ள ஏன் தயங்குகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    பின்னணி

    ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவிய சூழல் அப்போது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியிருந்தது. அப்போது இரு தலைவர்களும் ஹார்முஸ் நிலவரம் மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் குறித்தும் விவாதித்தனர். மேலும், மற்றொரு நாடு இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். அதே நேரத்தில், இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன.

    Advertisement

    இப்படி சர்வதேச அளவில் முக்கியமான சூழல் நிலவியபோது தான், டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை 45 நிமிட பிரஸ் மீட்டாக மாறியிருக்கிறது.

    English Summary

    India reportedly asked for no questions from journalists during the Modi Trump meeting at the G7 Summit(டிரம்ப் மோடி சந்திப்பு குறித்து வெளியான தகவல்): India US relation latest news in tamil.