கடந்த 30 ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுதான் முதல்முறை! ஆட்டம் காணும் அமெரிக்காவின் அஸ்திவாரம்!

  • வாஷிங்டன்: கடந்த 25-30 ஆண்டுகளில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் இருப்பு பட்டியலில் வைத்துள்ள அமெரிக்க டாலரின் பங்கு மிகப்பெரிய அளவுக்கு குறைந்திருக்கிறது. இதனை ஐஎம்எப் உறுதி செய்திருக்கிறது.

    Advertisement

    அமெரிக்காவுக்கு பலமே டாலர்தான். அப்பேற்பட்ட டாலருக்கே இடமில்லை என்று சொல்லும்போது, சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

    Advertisement

    ஐஎம்எஃப் புள்ளி விவரங்களின்படி, கடந்த 1990களின் இறுதியில் உலக நாடுகளின் அந்நிய செலாவணி இருப்பில் அமெரிக்க டாலரின் பங்கு 70%க்கும் மேல் இருந்தது. அதாவது மற்ற நாடுகள் அதிக அளவில் அமெரிக்க கரன்சியை கையில் வைத்திருந்தன. இன்னைக்கு அந்த நிலைமை அப்படியே மாறியிருக்கிறது.
    கடந்த 30 ஆண்டுகளில் இது குறைந்திருக்கிறது. 2025-2026ம் ஆண்டுகளில் அதிகாரப்பூர்வ டேட்டாக்களின்படி, டாலரின் பங்கு படிப்படியாக குறைந்து தற்போது 56-57% என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் டாலர் இந்த அளவுக்கு கீழே போனது கிடையாது.

    இந்த வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் ஒட்டுமொத்த முதலீட்டு அபாயத்தை குறைக்க.. டாலரை மட்டுமே நம்பாமல் மற்ற விஷயத்திலும் கவனம் செலுத்தியுள்ளன. குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகளில் டாலர் பத்தரங்களுக்கு பதில், தங்கத்தை சேமிக்க தொடங்கியிருக்கின்றன.

    Advertisement

    நம்மூர் ரிசர்வ் வங்கியிலும் தங்கம் அதிக அளவுக்கு சேமிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மறுபுறம் சர்வதேச வர்த்தகங்களில் யூரோ, ஜப்பானின் யென், மற்றும் சீனாவின் ரென்மின்பி ஆகிய கரன்சிகளின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மேலும் உள்ளூர் கரன்சிகளில் பல நாடுகள் வர்த்தகத்தை தொடங்கியிருக்கின்றன.

    அமெரிக்கா மற்ற நாடுகள் மீது விதிக்கும் பொருளாதார தடைகள், டாலரை ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்.. டாலர் பயன்பாட்டை தீவிரமாக குறைத்து வருகின்றன. ஆனால் என்னதான் டாலர் பயன்பாடு குறைந்திருந்தாலும், டாலரின் ஆதிக்கம் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிடவில்லை.

    Advertisement

    தற்போதும் உலக அளவில் 56% பங்களிப்புடன் அமெரிக்க டாலரே உலகின் முதன்மை மற்றும் வலிமையான இருப்பு நாணயமாக நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உள்ள யூரோ, வெறும் 20% பங்கை கொண்டு இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. எனவே, இது டாலரின் வீழ்ச்சி கிடையாது. மறாக உலக நாடுகள் தங்களின் பாதுகுாப்புக்காக செய்யும் ஒரு நிதானமான பொருளாதார உத்தி மாற்றமாகும்.

    டாலரின் கதை முடிய இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உள்ளூர் நாணயங்களில் உலக நாடுகள் வர்த்தகத்தை தற்போது செய்து வருகின்றன. இருப்பினும் இது 80% அளவை எட்டும்போதுதான் டாலர் பலவீனமடையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    De dollarization: Over the past 25–30 years, the share of US dollars held in the reserve portfolios of central banks worldwide has declined significantly. The IMF has confirmed this.