இந்தியா – சீனாவிற்கு கூடுதலாக 100% வரி.. ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய மசோதாவால் சிக்கல்

  • வாஷிங்டன்: ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்காவின் செனட் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை வதித்துள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யாவிற்கு இன்னும் கூடுதலாக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

    Advertisement

    இதற்காக அமெரிக்காவின் செனட் சபையில் புதிய மசோதா மீது விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த மசோதா என்பது ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதோடு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்பட வர்த்தக ரீதியாக பிற பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வழங்க உள்ளது.

    இந்த மசோதா தான் தற்போது இந்தியாவுக்கும், சீனாவிற்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும், அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த மசோதா அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால் டிரம்பால் நம் நாட்டுக்கும், சீனாவிற்கும் 100 சதவீத வரிகளை கூடுதலாக விதிக்க முடியும்.

    Advertisement

    இந்தியா, சீனா மட்டுமின்றி ஜப்பான், சில ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கேஸ் வாங்கி வருகிறது. இதனால் அந்த நாடுகளும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அதன் வருவாயை குறைக்கும் வகையி்ல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

    ஆனால் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் உள்ளிட்டவற்றை பிற நாடுகளுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதாகவும், இதனால் தான் ரஷ்யாவால் தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிய முடிகிறது என்பதும் அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனை காரணம் காட்டி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி அமெரிக்கா நம் நாட்டுக்கும் ஏற்கனவே 25 சதவீத வரியை விதித்தது.அதன்பிறகு அந்த வரி குறைக்கப்பட்டது.

    Advertisement

    இப்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மீண்டும் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்காவின் 100 சதவீத வரி வரை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்துள்ளது. ஆனாலும் கூட இந்த மசோதா அமெரிக்காவில் சட்டமாக்க வேண்டும் என்றால் பல்வேறு கட்டங்களை தாண்ட வேண்டி உள்ளது. முதலில் செனட் அதன்பிறகு பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடக்கும். இந்த 2 சபைகளிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்பிறகு அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுக்கு செல்லும். அவர் அனுமதி வழங்கும்பட்சத்தில் வரி விதிப்பு தொடங்கும்.

    English Summary

    The US Senate is taking steps to impose additional economic sanctions on Russia. This raises the risk of a tax of up to an additional 100 percent being levied on our country for purchasing crude oil from Russia.