அமெரிக்கா போட்ட புது சட்டம்.. இந்தியாவின் பொருளாதாரமே சரியப்போகுது! முக்கிய எச்சரிக்கை!

  • வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்தியா, அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் இந்தியா மீது 100% வரியை அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது. டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கும் இந்த சட்ட மசோதா.. அமல்படுத்தப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    அமெரிக்காவின் இந்த கடுமையான வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவக்கூடிய நிச்சயமற்ற சூழல் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என்று ICRA நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல.. எனபதை போல, இந்தியாவுக்கு வரிகள் புதிய விஷயம் கிடையாது. கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில்.. ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதற்காக அமெரிக்கா 25% வரியை போட்டிருந்தது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பு வர்த்தக உடன்பாட்டின்படி அது நீக்கப்பட்டது. இருப்பினும் இப்போது 100% அமல்படுத்தப்பட்டால், டிரம்ப் காலத்தில் இந்தியா எதிர்கொண்ட அதிகபட்ச வரியாக இது இருக்கும்.

    இந்த மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262-159 என்ற கணக்கில் ஒப்புதல் கிடைத்தது. இருப்பினும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் முன்னணி தலைவர் கிரிகோரி மீக்ஸ் உள்ளிட்டோர் இந்த மசோதாவை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். இந்த சட்டம் ரஷ்யாவை தண்டிப்பதை விட.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எல்லையற்ற சுங்கவரி அதிகாரங்களை வாரி வழங்குவதாகவும், இதனால் இறுதியில் அமெரிக்க மக்களுக்கே இறக்குமதி வரி உயரும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

    Topics: #india #oil #us

    English Summary

    India's oil trade: The United States has stated that buyers of Russian crude oil must pay the required price for it. Due to India's significant imports of crude oil from Russia, the US has proposed a 100% tariff on India. Experts have warned that if this bill—currently awaiting Trump's approval—is enacted, India's economy will be adversely affected.