ஏடாகூடமாகும் எல் நினோ.. கண் முன் காத்திருக்கும் மிகப் பெரிய ஆபத்து! அலறது ஆஸ்திரேலியா! அடுத்து?

  • வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ இதுவரை பதிவான பல வலுவான எல் நினோ நிகழ்வுகளை விட வேகமாகவும் தீவிரமாகவும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இது மேலும் வலிப் பெற்றால் உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை, அதிக மழைப்பொழிவு, இதுவரை வரலாறு காணாத புயல்கள், வறட்சி மற்றும் காட்டு தீ உள்ளிட்ட பல்வேறு வானிலை அதி தீவிர நிகழ்வுகளை அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்,

    Advertisement

    பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதியின் கடல் நீரில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் நிகழ்வு எல் நினோ என அழைக்கப்படுகிறது. இது இயற்கையான வானிலை நிகழ்வாக இருந்தாலும் கடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது காற்றின் சுழற்சி மற்றும் வளிமண்டல இயக்கங்களில் மாற்றம் ஏற்படும்.

    Advertisement

    இதனால் பசுபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நாடுகளில் சில வானிலை மாற்றங்கள் உருவாகும். அதுமட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் மழை, வெப்பம், புயல் போன்ற பிரச்சனைகளை இது ஏற்படுத்தும். பொதுவாக நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் எல் நினோ உச்சத்தை அடையும்.

    எல் நினோ 2026

    ஆனால் தற்போதைய எல் நினோ வழக்கத்தை விட மிகவும் முன்னதாகவே உருவாகி உள்ளதாக எச்சரிக்கின்றனர் வானிலை நிபுணர்கள். தற்போது வெப்பநிலை மட்டுமல்லாது பருவநிலை மாற்றத்தால் உலகமே பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், இது எல் நினோ பிரச்சனையின் தீவிரத்தை அதிகரித்து இருப்பதாக சொல்கின்றனர். ஆகஸ்ட் மாத ஒப்பிட்டளவில் பார்க்கும்போது சராசரியை விட சுமார் 2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    பசிபிக் பெருங்கடல்

    இது கடந்த கால எல் நினோ நிகழ்வுகளை விட அதிக வலுவாக இருப்பதோடு அதன் வேகமும் அசாதாரணமாக இருப்பதாக சொல்கின்றனர். தற்போது இதன் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் தெரிய தொடங்கியுள்ளதாகவும் சொல்கின்றனர். பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நாடுகள் இதன் நேரடி தாக்கத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தோனேசியாவில் மிகப்பெரிய காட்டு தீ சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது.

    காட்டுத்தீ

    வறண்ட வானிலையோடு வெப்பநிலை அதிகரிப்பதால் காட்டுத் தீ தீவிரம் அடைவதற்கான முக்கிய காரணி உருவாகி இருக்கிறது. எனவே இந்தோனேஷியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீ நிகழ்வுக்கு எல் நினோ முக்கிய காரணம் என்றும் எச்சரிக்கின்றனர். தற்போது ஜப்பான் அருகில் இருந்து ஹவாய் வரையிலான பசிபிக் பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வெப்பமண்டல புயல்கள் உருவாகி இருப்பதும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

    Advertisement

    கனமழை, புயல்

    பொதுவாக எல் நினோ காலங்களில் கிழக்கு மற்றும் மத்திய பசுபிக் பகுதிகளில் கடல்நீர் வெப்பமடைவதால் அங்கு புயல்கள் அதிகரிக்கும். ஆனால் ஒரே நேரத்தில் இவ்வளவு புயல்கள் உருவாகி இருப்பது வழக்கமான நிகழ்வு அல்ல என கூறுகின்றனர் ஆய்வாளர்கள். ஆஸ்திரேலியா பசிபிக் பெருங்கடலின் நேரடி தாக்கத்திலிருந்து ஓரளவு விலகி இருந்தால் வசந்தகாலம் மற்றும் கோடைகாலத்தை நெருங்கும் போது தாக்கம் அதிகரிக்கலாம் என்கின்றனர்.

    உலக வானிலை

    வடக்கு ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் இந்த வாரம் வழக்கத்துக்கு மாறாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் வழக்கத்தை விட வறண்ட வசந்த காலம் மற்றும் கோடை காலம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .இதனால் தங்கு காட்டுத்தீ அச்சமும் அதிகரித்துள்ளது.

    English Summary

    Scientists warn a rapidly intensifying El Nino could fuel extreme heat, wildfires, droughts, storms and heavy rainfall worldwide.