ரஷ்யாவில் சூரிய கிரகணம்! இந்தியர்கள் நேரில் பார்க்கலாம்! சூப்பர் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நாசா!

  • வாஷிங்டன்: ஆக.12ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட இருக்கிறது. கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் தெரியும் கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க.. இந்த சூரிய கிரகணத்தை லைவாக நாசா டெலிகாஸ்ட் செய்ய இருக்கிறது.

    Advertisement

    இதன் மூலம் பல ஆயிரம் கி.மீக்கு அப்பால் நடக்கும் இந்த வானியல் அதிசயத்தை நம்மால் நேரில் பார்ப்பதை போல உணர முடியும்.

    Advertisement

    பூமியில் இருந்து சுமார் 15 கோடி கி.மீ தூரத்தில் இருக்கும் சூரியனும், 3.84 லட்சம் கி.மீ தூரத்தில் இருக்கும் சந்திரனும், ஒரே நேர்க்கோட்டில் வருவது என்பது அதிசயம் தான். இதனால்தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு இருள் பூமியை சூழ்கிறது. சூரியன் நிலவை விட 400 மடங்கு பெரியதாக இருந்தாலும், நிலவை விட 400 மடங்கு தூரத்தில் இருக்கிறது. இதனால்தான் சூரியனை அது முழுமையாக மறைக்கிறது.

    அந்த வகையில் ஆக.12ம் தேதி சூரிய கிரகணம் பூமியில் ஒரு சில பகுதியில் மட்டுமே முழுமையாக தெரியம். கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரியும். அதுவே அமெரிக்காவின் சில பகுதிகளிலும், கனடா, ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பகுதி சூரிய கிரகணமும் தெரியும்.

    Advertisement

    இருப்பினும் இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக, நாசா NASA+, YouTube, Facebook, X என தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த சூரிய கிரகண நிகழ்வை லைவாக ஒளிபரப்ப இருக்கிறது.

    இந்தியாவை பொறுத்தவரை சூரிய கிரகணத்திற்கு பின்னால் ஏராளமான கதைகள் இருக்கின்றன. ராகு, கேது போன்ற புராண கதைகள் சொல்லப்படுகின்றன. மட்டுமல்லாது கிரகண நேரங்களில் வெளியில் போக கூடாது, சாப்பிடக்கூடாது என்றும் சொல்வது உண்டு. ஆனால், இந்த நேரத்தில் சாப்பிடுவதாலோ.. வெளியில் செல்வதாலோ பாதிப்புகள் ஏற்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே சூரிய கிரகணத்தை நாசாவின் சோஷியல் மீடியா பக்கங்களில் நேரலையில் கண்டு ரசியுங்கள்.

    English Summary

    Solar Eclipse: A solar eclipse is set to occur on August 12. While the eclipse will be visible from countries like Greenland and Russia, NASA will be broadcasting it live for viewers in India.