திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான்

  • வாஷிங்டன்: போர் நிறுத்த விஷயத்தில் ஈரான் வழிக்கு வரவில்லை என்று சொல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் தாக்குதலை நடத்தியிருந்தார். இந்த தாக்குதல் சர்வதேச அளவில் பதற்றத்தை மேலும் அதிகரித்திருந்தது. இப்படி இருக்கையில், தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டிருக்கிறார். டிரம்பின் இந்த மன மாற்றம் குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் வீழ்த்தியதாகக் கூறி, கடந்த 3 நாட்களாக ஈரானின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதனைத் தொடர்ந்து, ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம் என்றும், அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்பை முழுமையாக அமெரிக்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாகவும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

    Advertisement

    ஆனால், திடீரென நேற்றிரவு நடக்க இருந்த பெரிய தாக்குதலை டிரம்ப் வேண்டாம் என்று நிறுத்தியிருக்கிறார். தாக்குதலை ரத்து செய்தது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், அதற்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்கியுள்ளார்.

    அமெரிக்காவின் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய அரசாங்கத்தின் மிக உயர்மட்டத் தலைமை பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே ரகசியமாக நடந்து வந்த பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

    வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த உடன்படிக்கையை ஒரு மிகச்சிறந்த தீர்வு என்று வர்ணித்துள்ளார். ஈரான் இனி எப்போதும் அணு ஆயுதங்களை உருவாக்கவோ, வாங்கவோ அல்லது உருவாக்க முயற்சிக்கவோ கூடாது என்ற அமெரிக்காவின் நிபந்தனையை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் 95% நோக்கமே இதுதான் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

    Advertisement

    உடன்படிக்கைக்கான வரைவு ஒப்பந்த ஆவணங்கள் இறுதி வடிவம் பெற்றுவிட்டதாகவும், வரும் வார இறுதிக்குள் ஐரோப்பாவில் இந்த வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும், அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இதில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காகத்தான் நேற்றிரவு நடக்க இருந்த பெரிய தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியிருக்கிறது.

    Topics: #trump #iran #us

    English Summary

    Trump had launched a sudden attack, claiming that Iran was not coming around on the ceasefire issue. This attack had further heightened international tensions. However, he has now ordered a halt to the attack. Trump's change of heart has sparked international debate.