அமெரிக்காவுக்கு ஆப்பு.. காலியாகப் போகுது கலிபோர்னியா? காத்திருக்கும் கருப்பு பூதம்.. பறந்த வார்னிங்!

  • வாஷிங்டன்: உலகம் முழுவதும் தற்போது பேசப்படும் விஷயமாக சூப்பர் எல் நினோ மாறி இருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் வலுவான சூப்பர் எல் நினோ காரணமாக அமெரிக்காவின் மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் இலையுதிர் மற்றும் குளிர் காலத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யக் கூடும் எனவும், கடலோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் பருவநிலை நிகழ்வுதான் எல் நினோ. கடலின் வெப்பநிலை அதிகரிப்புடன் காற்றின் போக்கு மாறுவதால், உலகின் பல்வேறு பகுதிகளின் அதிக மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு இருக்கும்.

    Advertisement

    கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியைவிட குறைந்தது 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் அளவுக்கு எல் நினோ வலுவாக இருந்தால், அது 'சூப்பர் எல் நினோ' என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு உருவாகும் எல் நினோ, இந்த நூற்றாண்டிலேயே மிகவும் வலுவானதாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

    சூப்பர் எல் நினோ

    அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பின்படி, வரும் இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் இந்த எல் நினோ மேலும் வலுவடையலாம். அதன் தாக்கம் 2027-ம் ஆண்டு தொடக்க வசந்த காலம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் மேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர். இதேபோல்,

    Advertisement

    கலிபோர்னியா

    கலிபோர்னியா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் இயல்பைவிட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 முதல் 100 சதவீதம் வரை இருப்பதாக ஐரோப்பிய கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் மாதிரி கணிப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்த்தில் எல் நினோ உருவாகும் போது ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான வானிலை நிலவும் என்று உறுதியாகக் கூற முடியாது என கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் காலநிலை விஞ்ஞானி டேனியல் ஸ்வைன் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த முறை முன்னரே கணிக்கப்படும் அளவுக்கு எல் நினோ வலுவாக இருப்பதால், கலிபோர்னியாவில் அதிக மழையுடன் கூடிய குளிர்காலம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார்.

    Advertisement

    கடற்கரை அரிப்பு

    அதிக மழையுடன் கடுமையான புயல் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வதால், கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம். குறிப்பாக வேகமான கடல் அலை ஏற்படும் காலங்களில் கடல் நீர் கரையை நோக்கி செல்லும் வாய்ப்பும் உள்ளது. இதனால் கடற்கரை அரிப்பு, பவளப் பாறைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதற்போது மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் கலிபோர்னியா இதெ போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

    வெள்ளப் பெருக்கு

    1982-83ஆம் ஆண்டில் ஏற்பட்ட வலுவான எல் நினோ காரணமாக கலிபோர்னியாவில் 33 கடலோர வீடுகள் முற்றிலும் சேதமாகின. மேலும் சுமார் 3,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 1997-98ஆம் ஆண்டின் எல் நினோ காலகட்டத்தில் மிகப்பெரிய வெள்ளப் பேருக்கு ஏற்பட்டது. அப்போது புயல் காரணமாக 17 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2015-16ஆம் ஆண்டின் எல் நினோ குளிர்காலத்தில் கலிபோர்னியா கடற்கரைகளில் வரலாறு காணாத அளவுக்கு கடலோர அரிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    A powerful Super El Nino could bring heavy rain, coastal flooding and severe storms to California during the coming winter.