ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன்

  • வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி ஈரான் அடுத்தடுத்து டிரோன்களை ஏவிய நிலையில், அவற்றை அமெரிக்கா விமானப்படை சுட்டுவீழ்த்தியுள்ளது. குறைந்தது 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஈரானின் டிரோன் தளங்களையும் தாக்கி அழித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் உச்ச கட்ட பதற்றத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக நிறுத்தம் அமலில் உள்ளது. இதை நிரந்தரமாக்க பேச்சுவார்த்தைக்கு தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    Advertisement

    ஈரான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

    இதனால், மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஈரானின் 4 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹர்முஸ் ஜலசந்தியை நோக்கி ஏவப்பட்ட இந்த ஈரான் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரானின் கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

    போர் நிறுத்தம் நீடிக்குமா?

    எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து பாதிப்பால் உலக அளவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஈரானின் இந்த செயலை அடுத்து, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய நிலையில், ஈரானின் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது, போரை நிறுத்துவதற்காக அமலில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தையும், அதனை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் பாதிக்க கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    Advertisement

    முன்னதாக, இந்த வார துவக்கத்தில், ஈரான் குவைத்தின் முக்கிய விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குவைத் விமான நிலையம் கடுமையாக சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பல பேர் காயமடைந்தனர். மேலும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களால் போர் நிறுத்தம் நீடிக்குமா? என்ற அச்சம் எழுந்த நிலையிலும் டிரம்ப் இது பற்றி நேற்று செய்தியாளர்களிம் பேசும் போது பாசிட்டிவ் ஆக பேசினார்.

    உர விலைகள் கணிசமாக குறையும்

    டிரம்ப் கூறுகையில், ஈரான் தொடர்பான நிலைமை (பேச்சுவார்த்தை) மிகவும் நன்றாக முன்னேறி வருவதாகத் தெரிகிறது. ஈரான் விவகாரத்தில் மிக விரைவில் நாம் வெளியே வரப்போகிறோம். அது பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, அல்லது மிகவும் கடுமையான நடவடிக்கை மூலமாக இருந்தாலும் சரி, ஒரு வலுவான முடிவு எடுக்கப்படும். கடுமையான வழியே ஒருவேளை எளிதான வழியாக இருக்கலாம். ஆனால் எப்படியாயினும் நாம் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வருவோம். அதன்பிறகு உர விலைகள் கணிசமாகக் குறையும். நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பும்" என்றார்.

    English Summary

    Strait of Hormuz: Regional tensions escalated after Iran reportedly launched several drones toward the Strait of Hormuz. US fighter jets allegedly intercepted at least four drones and struck Iranian radar sites, according to reports, prompting heightened security monitoring in the area.