இனி ஐடி ஊழியர்கள் அமெரிக்க செல்ல முடியாது.. ‘டாப்' 8 நிறுவனங்களில் PERM திட்டத்தில் இருந்து தூக்கிய டிரம்ப்

  • வாஷிங்டன்: காக்னிசண்ட், இன்போசிஸ், டாடா, விப்ரோ, கேப்மெஜினி, எச்சிஎல் உள்ளிட்ட டாப் ஐடி நிறுவனங்களை PERM திட்டத்தில் இருந்து நீக்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த ஐடி நிறுவனங்கள் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரை அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட உள்ளது. இந்த PERM திட்டம் என்பது என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    Permanent Labour Certification என்பதன் சுருக்கம் தான் PERM. இதனை தமிழில் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டம் என்று சொல்லலாம்.

    Advertisement

    இந்த திட்டத்தின்படி அமெரிக்க முதலாளிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை எடுத்து நிரந்தரமாக பணியமர்த்த முடியும்.

    அதாவது பணிக்கு தகுதியான அமெரிக்கர் கிடைக்கவில்லை என்பதை நிரூபித்து எச்1 பி விசா மூலம் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு சேர்க்க முடியும். அதேவேளையில் வெளிநாட்டு தொழிலாளரால், அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்கள், பணிச்சூழல் பாதிக்காது என்பதை நிரூபிக்க வேண்டும்

    ஆனால் PERMஐ பயன்படுத்தி வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அதன்பிறகு அமெரிக்கர்களை பணியில் இருந்து நீக்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அமெரிக்கர்களை ஒப்பிடும்போது இந்தியா உள்பட பிற நாடுகளை சேர்ந்தவர்கள் குறைவான ஊதியத்தில் பணிபுரிய தயாராகி இருப்பதால் இந்த PERM திட்டத்தை பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    இதுபற்றி அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஆயிரக்கணக்கான 6 ஆயிரம் அமெரிக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதேவேளையில் எச்-1பி விசா மூலம் 6,300 பேரயும், கிரீன் கார்டு வைத்திருக்கும் 3 ஆயிரம் பேரையும் பணிக்கு அமர்த்தி உள்ளது. அதன்படி ஒரு அமெரிக்கருக்கு பதில் 1.5 மடங்கு வெளிநாட்டினரை பணியமர்த்தி உள்து.

    இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்.. குண்டை தூக்கி போட்ட டிரம்ப்! அமெரிக்காவே அப்படித்தாங்க!

    அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களில் மிகவும் மோசமான அமைப்பை கொண்ட நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது. மைக்ரோசாப்ட் பணியை விட்டு நிறுத்தும் ஒவ்வொரு அமெரிக்க ஊழியர்களுக்கும் பதிலாக புதிதாக வெளிநாடுகளில் இருந்து ஆட்களை எடுத்து பணியமர்த்துகிறது'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் காக்னிசண்ட், இன்போசிஸ், டாடா, விப்ரோ, கேப்மெஜினி, எச்சிஎல் உள்ளிட்ட டாப் ஐடி நிறுவனங்களை PERM திட்டத்தில் இருந்து நீக்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் உள்பட பிற வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு பணிக்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    US President Donald Trump administration has issued a drastic order excluding top IT companies-including Cognizant, Infosys, Tata, Wipro, Capgemini, and HCL-from the PERM program. Consequently, these IT firms will be unable to send foreign nationals, including Indians, to the United States. Here, we explore what the PERM program is and the background behind this move.