ஒரு வழியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட டிரம்ப்! இந்தியாவில் பெட்ரோல் விலை குறையுமா?

  • வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டிருக்கின்றனர்.

    Advertisement

    கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியிருந்தது. தற்போது அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதால், மத்திய கிழக்கில் இனி அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் ஓகேதான் ஆனால், இந்த அமைதி ஒபந்தம் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

    லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும்.
    உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்கப்படும்.
    ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவைக் குறைக்க (Down-blend) ஒப்புக்கொண்டுள்ளது. இது சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் நடைபெறும்.
    ஈரானின் மறுசீரமைப்பு பணிகளுக்காக சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளுக்கு அமெரிக்கா வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.

    கையெழுத்திடும் நிகழ்வு

    அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு உணவில் பங்கேற்றபோது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மின்னணு முறையில் தனது கையொப்பத்தைப் பதிவு செய்தார்.

    Advertisement

    அதிபர் டிரம்ப் கருத்து

    இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய டிரம்ப், "இது ஒரு இறுதி ஒப்பந்தம் அல்ல, ஆனால் போரைத் தவிர்க்கவும் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைவிலிருந்து பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை" என்று தெரிவித்தார். மேலும், ஈரான் இந்த ஒப்பந்தத்தை முறையாகப் பின்பற்றத் தவறினால் மீண்டும் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் நிரந்தரமான அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இந்தியாவில் எரிபொருள் விலை குறையுமா?

    என்னதான் தற்போது இரு நாடுகளுக்கு இடையில் அமைதி திரும்பியிருந்தாலும், ஏற்கெனவே ஏற்பட்ட எரிபொருள் விநியோக சங்கிலி பாதிப்பு சரியாக குறைந்தது ஓராண்டு வரை ஆகும். அதுவரை எரிபொருள் விலை குறைய வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    Topics: #trump #iran #us

    English Summary

    Trump: US President Donald Trump and Iranian President Masoud Pezeshkian have signed a 14-point Memorandum of Understanding (MoU) aimed at ending the war between the two countries.