நள்ளிரவில் பரபரப்பு.. பயங்கர ஆயுதங்களோடு டிரம்ப்பை கொல்ல வந்த இளைஞர்! தட்டி தூக்கிய சீக்ரெட் சர்வீஸ்

  • வாஷிங்டன்: வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய வேண்டும் என்று தன்னிடம் யாரோ சொல்வது போல குரல்கள் கேட்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். அவரிடம் இருந்து ஏஆர்-15 ரக துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த முடிந்த மிட் டேர்ம் தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வியை சந்தித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிரம்ப் கட்சியின் கையை விட்டு போனது. இதனால் டிரம்ப்பால் இனிமேல் தனக்கு விரும்பிய சட்டங்களை கொண்டு வர முடியாது. எதிர்க்கட்சிகள் ஆதரவு இருந்தால் மட்டுமே அது நாடாளுமன்றத்தில் நிறைவேறும்!

    Advertisement

    டிரம்ப்

    இந்த அதிர்ச்சியில் இருந்து டிரம்ப் ஆதரவாளர்கள் வெளியே வருவதற்குள் மற்றொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது வெள்ளை மாளிகைக்கு அருகே பயங்கர ஆயுதங்களோடு சுற்றி திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏஆர்-15 ரக துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே வியாழக்கிழமை இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரி ஒருவர், கான்ஸ்டிடியூஷன் அவென்யூ பகுதியில் நீல நிற ஃபோர்டு எஃப்-150 பிக்கப் டிரக் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்தார். இதையடுத்து அந்த வாகனத்தை நெருங்கி உள்ளே இருந்த நபரிடம் விசாரித்தார்.

    Advertisement

    ஆயுதங்கள்

    அந்த நபரிடம் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என்று விசாரித்துள்ளார். அப்போது ஆயுதம் வைத்திருப்பதை அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், அவரால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. இதையடுத்து அவரை காரில் இருந்து இறக்கிய அதிகாரி கூகுள் டிரான்ஸிலேட் உதவியுடன் அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.

    தன்னை யாரோ துப்பாக்கியால் கொல்ல முயன்றதாகவும், அவர்களிடமிருந்து அந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வாகனத்துக்குள் இருந்த பழுப்பு நிற பையை காட்டியுள்ளார். அதில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, MAC-10 ரக துப்பாக்கி, Glock 43x கைத்துப்பாக்கி, AR-15 ரக துப்பாக்கி என மூன்று ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றுடன் ஏராளமான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

    Advertisement

    கைது

    இந்த வாகனம் தெற்கு கரோலினாவில் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை அதிகாரிகள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ரோன்னி யோர்ட்ரிக்ஸ் குவானிபா கிரினோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அந்த நபர் தனது தலைக்குள் தொடர்ந்து ஏதோ குரல்கள் கேட்டதாக சொன்னார். வாஷிங்டன் சென்று அதிபர் டிரம்ப்பை கொல்லுமாறு அந்த குரல்கள் சொல்லிக் கொண்டே இருந்ததாகவும் இதன் கரணமாகவே அந்த நபர் துப்பாக்கியுடன் இங்கு வந்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தீவிர விசாரணை

    குவானிபா கிரினோஸ் மீது திருடப்பட்ட வாகனத்தை பயன்படுத்தியது, உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நபர் என்பதும் 2024 மார்ச் மாதம் டெக்சாஸ் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகவும் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    English Summary

    26-year-old man was arrested near the White House with three firearms and ammunition(டிரம்ப் மீது கொலை முயற்சி): Trump assassination attempt latest news in tamil.