அமெரிக்க தேர்தலை குலைக்க சீனா சதி? டிரம்ப் வெளியிட்ட ரகசிய ஆவணம்! என்ன தான் நடக்கிறது

  • வாஷிங்டன்: இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி டிரம்ப் வழக்கம் போல சீனாவுக்கு எதிராக பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் தேர்தல் சிஸ்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக சீடிய டிரம்ப், அமெரிக்காவின் வாக்காளர்கள் குறித்த தகவல்களை சீனா சட்டவிரோதமாக திருடி வைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.

    Advertisement

    அமெரிக்க அதிபரான டிரம்ப் எப்போதும் திடீர் திடீரென எதாவது பரபர குற்றச்சாட்டை முன்வைப்பார். அதிலும் குறிப்பாக சீனாவை குறிவைத்தே அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்தச் சூழலில் தான் அமெரிக்க தேர்தல் முறை குறித்து பேசிய டிரம்ப், அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடு குறித்து சில பகீர் தகவல்களை கூறியிருக்கிறார்.

    Advertisement

    சீனா தலையீடு

    அதாவது அமெரிக்க தேர்தல் டேட்டாவை சீனா கைப்பற்றியதாகவும், அமெரிக்க தேர்தல் கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் வகையில் அது தொடர்பான ஆவணங்களை வெளியிட போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் இருந்து நேரடியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய டிரம்ப், "2020 தேர்தல் தொடங்கி பல ஆண்டுகளாக அமெரிக்க தேர்தல் டேட்டாக்களை குறிவைத்து சீனா செயல்பட்டது. இதன் மூலம் சுமார் 220 மில்லியன் அமெரிக்க வாக்காளர்களின் தகவல்கள் சட்டவிரோதமாகச் சீனாவின் கைகளுக்குச் சென்றுள்ளது. இந்த டேட்டா லீக் அமெரிக்க தேர்தல் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை மறைக்க சிலர் முயன்றனர்.

    Advertisement

    குறைபாடுகள்

    இப்போதும் கூட நமது நாட்டின் தேர்தல் முறையில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களின் வாக்கு சரியான முறையில் பிராசஸ் செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும். ஆனால் இன்றைய தேர்தல் அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.. ஹேக்கிங் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு ஆபத்தான அளவுக்கு உள்ளது" என்றார்.

    மேலும், அமெரிக்க தேர்தல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய உளவுத்துறை தகவல்களை பொதுவெளியில் ரிலீஸ் செய்யவும் உத்தரவிட்டார். இதன் மூலம் அமெரிக்க தேர்தல் சிஸ்டம் எந்தளவுக்கு குறைபாடுகளை கொண்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்பதே அவரது வாதமாகும்.

    Advertisement

    முதல்முறை இல்லை

    அதேநேரம் டிரம்பின் இதுபோல குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே 2020ம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்குப் பிறகும் தேர்தல் மோசடி நடந்ததாக அவர் தொடர்ந்து கூறி வந்தார். இருப்பினும், தேர்தல் முடிவை மாற்றும் அளவிலான மோசடி நடந்ததை அவரால் நிரூபிக்க முடியவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    2020 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்திருந்தார். இருப்பினும், அந்த தோல்வியை ஏற்காத டிரம்ப், தேர்தல் முறைகேடு புகார்களை முன்வைத்தார். அவரது பேச்சை நம்பி டிரம்ப் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. அமெரிக்க நாடாளுமன்றத்தையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனால் சிலர் தங்கள் உயிரையே கூட இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    US President Donald Trump has accused China of capturing election data(சீனாவை தாறுமாறாக தாக்கும் டிரம்ப்): Trump attacks China latest news in tamil.