அமெரிக்கா ஒன்னும் நட்பு நாடு கிடையாது.. மீண்டும் நிரூபித்த டிரம்ப்! அதிகாலையில் வந்த ஷாக்!

  • வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடிதான் என்னுடைய பெஸ்ட் பிரண்ட் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால், அதெல்லாம் சும்மா வாய் வார்த்தைக்காகத்தான் என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது.

    Advertisement

    அதாவது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரியை போடும் சட்டத்தில் இன்று டிரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார். இந்த சட்டத்தால் முதலில் அடிவாங்கும் நாடு இந்தியாதான்.

    Advertisement

    ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 30 நாட்களுக்குள் 100% வரியை விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம் முக்கியமாக ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளையும் தடைகளிலிருந்து தப்பிக்க ரஷ்யாவுக்கு உதவும் கப்பல்களையும் குறி வைக்கிறது.

    கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை விதிக்கும் புதிய அதிகாரங்களை அமெரிக்க நாடாளுமன்றம் அதிபருக்கு வழங்கியிருக்கிறது. இந்த சட்டத்ததால் தற்போது இந்தியாதான் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

    Advertisement

    ஆனால், இதில் தௌிவற்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது இந்த சட்டத்தில் எந்தெந்த நாடுகள் குறி வைக்கப்படும் என்று பெயரிட்டு குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதில் தற்போதைக்கு ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

    அமெரிக்காவின் இந்த புதிய வரிகள் இருதரப்பு உறவுகளை பாதிக்கலாம் என்று இந்தியா ஏற்கெனவே எச்சரித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கும் சிறப்பு அதிகாரமும் டிரம்புக்கு உண்டு.

    என்ன சொல்ல வராங்க? ரஷ்யா கிட்ட இருந்து ஆயில் வாங்குனா வரினு சொல்றாங்க.. ஆனா, தனக்கு வேண்டப்பட்ட நாடுக்கு வரி விலக்கும் கொடுக்க முடியும்னு சொல்றாங்க.. இந்தியாவுக்கு வரி இருக்கா? இல்லையா? என்று பரவலாக கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    அரசியல் தாக்கம்

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் வருவதால், இந்த வரியை அமல்படுத்தினால்.. பெட்ரோல், டீசல் விலை எகிற வாய்ப்பு இருக்கிறது. இது பணவீக்கத்தையும் உயர்த்தும். எனவே டிரம்ப் உடனடியாக இதனை அமல்படுத்த தயங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் விதித்த பல வரிகளை அமெரிக்க நீதிமன்றங்கள் ரத்து செய்தன.

    ஆனால், இந்த முறை நாடாளுமன்றமே நேரடியாக சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியிருப்பதால் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போக முடியாது. இப்படி இந்த வரி விஷயத்தில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. பொருத்திருந்து பார்ப்போம் டிரம்ப் என்ன செய்கிறார் என்று.

    English Summary

    Trump signs Russia sanctions bill; US President Donald Trump often says that Prime Minister Narendra Modi is his best friend. However, it has now been proven that this was merely lip service.