வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிரம்பை முன்னிறுத்திதான் குடியரசுக் கட்சி தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், இப்படி செய்தது பெரிய அளவுக்கு கை கொடுக்கவில்லை. குறிப்பாக டிரம்ப் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்த தொகுதிகளில் கூட.. அவரது குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். மொத்தத்தில் டிரம்ப் காரணி தோல்வியடைந்திருக்கிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் என்பதை தாண்டி.. டிரம்ப் என்பவர் பெரிய கை! அப்படித்தான் குடியரசுக் கட்சி நினைத்திருந்தது. அதை சொல்லிதான் டிரம்பையும் ஏற்றி வைத்திருந்தார்கள். எனவே அவர் வந்து கை காட்டினால் போதும்.. கழுதையை நிற்க வைத்தால் கூட அந்த தொகுதியில் வெற்றி நிச்சயம் என்கிற ரேஞ்சுக்கு பேச்சுக்கள் இருந்தன.
டிரம்பும் இதை நம்பினார். நான்தான் அமெரிக்காவின் ஹீரோ என்று சொல்லிக்கொள்ளாத குறை ஒன்றுதான். மற்றபடி அவர் பேச்செல்லாம் அப்படித்தான் இருக்கும். யதர்த்தமும் கிட்டத்தட்ட டிரம்புக்கு ஆதரவாகத்தான் இருந்தது. கடந்த 2016ம் ஆண்டு முதல் அமெரிக்க அரசியலில் டிரம்ப் ஆதரிக்கும் வேட்பாளர்கள்தான் ஜெயிப்பார்கள் என்கிற நிலை இருந்தது. டிரம்ப் எந்த தொகுதிக்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்கிறாரோ.. ஊடகங்களில் எந்த வேட்பாளரை ஆதரித்து பேசுகிறாரோ.. அவரது தீவிர ஆதரவாளர்கள் அந்த வேட்பாளருக்குதான் மொத்தமாக வாக்களிப்பார்கள். இதனால், குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்ப் யாரை கைக்காடடுகிறாரோ.. அவரே இறுதி வேட்பாளராக நிறுத்தப்படும் சூழல் இருந்தது. 2026 இடைக்காலத் தேர்தலிலும் இதே வேகத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தார் டிரம்ப். ஆனால், இவரது செல்வாக்கு பல இடங்களில் பலிக்கவில்லை. குறிப்பாக கேன்சாஸ் மாநில செனட் தேர்தலில் எடுத்துக்கொண்டால்.. டிரம்ப் காரணி எந்த அளவுக்கு பெயிலியர் என்று தெரிந்துவிடும். இந்த மாநிலத்தில் 94 ஆண்டுகளாக தொடர்ந்து குடியரசுக் கட்சிதான் ஜெயித்து வருகிறது. இது அவர்களின் கோட்டை. எனுவே இந்த கோட்டையில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ரோஜருக்கு ஆதரவாக டிரம்பும், துணை அதிபர் வேன்ஸும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்புறம் என்ன? கோட்டை+டிரம்ப் காரணி = அமோக வெற்றி! இதுதான் குடியரசு கட்சியின் கணக்கு. ஆனால், ரிசல்ட் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வந்திருக்கிறது. மொத்தத்தில் டிரம்ப்பை கூட்டி வந்து பேச வெச்சாலும்.. கோட்டையில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது. இதற்கான காரணம், அமெரிக்க முழுவதும் இருந்த அதிருப்திதான். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக.. ஈரானுடன் போருக்கு போய், ஹார்முஸ் ஜலசந்தியை மூட வைத்து.. பெட்ரோல், டீசல் ரேட்டை ஏற்றிவிட்டார் டிரம்ப். அதை தொடர்ந்து மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறியது. இதுபோக உள்ளூர் பிரச்சனைகள், குடியேற்ற விவகாரத்தில் தேவையில்லாமல் சீன் போட்டது என மொத்தமும் டிரம்பின் காலை வாரிவிட்டது. இந்த பிரச்சனை இத்துடன் முடியவில்லை. இந்த தோல்வி 2028 அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று குடியரசுக் கட்சி அச்சமடைந்திருக்கிறது. எனவே கட்சிக்குள் டிரம்ப் தலைமைக்கு எதிராக கலக குரல்கள் வெடித்திருக்கின்றன. டிரம்பை மட்டும் நம்பினால் 2028 தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று மற்ற தலைவர்கள் பேச தொடங்கியிருக்கின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப் பெரும்பான்மை இழந்ததால்.. இனி அவரால் புதிய சட்டத்தை உருவாக்கவோ.. அதை அமல்படுத்தவோ எளிதாக முடியாது. மொத்தத்தில் டிரம்ப் பிம்பம் மொத்தமாக சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.தொக்காக சிக்கும் டிரம்ப்! மொத்த குடும்பத்தின் மீதும் நடக்க உள்ள விசாரணை! அமெரிக்காவில் அதிரடி
மொத்தமாக கதையை முடித்துவிட்ட அமெரிக்கர்கள்.. செனட் அவையில் டிரம்ப் கட்சி தோல்வி! இது தேவைதான்!
94 ஆண்டுகளுக்கு பிறகு.. டிரம்ப் கோட்டையில் கொடி நாட்டிய ஜனநாயக கட்சி! சம்பவம் செய்த அமெரிக்கர்கள்