இவ்வளவு அடி வாங்கியும்.. டிரம்புக்கு புரியல! இந்தியாவை விமர்சித்தவருக்கு.. முக்கிய பதவியாம்!

  • வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிராக வேலைகளை செய்ய சிலர் இருக்கிறார்கள். அப்பேற்பட்டவரை தூக்கி முக்கிய பொறுப்பில் அமர வைத்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்.

    Advertisement

    டிரம்பின் புதிய வெள்ளை மாளிகை தலைமை பணியாளராக 'ஸ்டீபன் மில்லர்' நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சாதாரண ஆள் கிடையாது. இதற்கு முன்பு இந்தியாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்பேர்ப்பட்ட நபரை தூக்கி முக்கிய பொறுப்பில் உட்கார வைத்திருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா இடைக்கால தேர்தலில், டிரம்ப் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பல காரணங்களில் இருந்தாலும்.. அதில் முக்கியமான காரணமாக இந்திய வம்சாவளியினுடைய கோபம் இருந்தது. இந்தியாவின் மீதான வரி, இந்திய ஐடி ஊழியர்கள் கிரீன் கார்டு பெறுவதை கடினமாக்கியது உள்ளிட்ட விஷயங்கள் அமெரிக்காவாழ் இளைஞர்கள் இடையே டிரம்ப் மீது கோபத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. இதெல்லாம் சேர்ந்துதான் ட்ரம்புக்கு எதிரான தோல்வியை கொடுத்தது.

    எனவே இதை புரிந்துக்கொண்டு.. இனியாவது இந்தியர்களுக்கு எதிரான செயல்களை குறைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கு அப்படியே எதிராக டிரம்ப் சில செயல்களை செய்திருக்கிறார். ஸ்டீபன் மில்லரை நியமித்ததுதான் அந்த செயல்.

    Advertisement

    இவர் ஒன்னும் லேசுபட்ட ஆள் கிடையாது. இவர் உருவாக்கிய கடுமையான கொள்கைகள் இந்தியாவை பாதித்திருக்கின்றன. கடந்த ஆண்டு இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கும் போது.. அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மில்லர் விமர்சித்திருந்தார். சீனாவுக்கு இணையாக இந்தியாவும் எண்ணெய் வாங்குவதன் மூலம், உக்ரைன் போருக்கு ரஷ்யா நிதி திரட்ட உதவுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

    மேலும், அமெரிக்கர்களுக்கு இந்தியா அதிகப்படியான வரிகளை விதிப்பதாகவும்.. இது வர்த்தக சமநிலையின்மை ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இவர் இப்படி பேசியதால்தான் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25% வரியை போட்டது. இதுபோக.. அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு எடுத்த சில முக்கியமான முடிவுகளுக்கும் இவர்தான் மூளை. இப்படிப்பட்ட நபரைதான் தற்போது டிரம்ப் முக்கியமான இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

    Advertisement

    இதனால் இந்தியா-அமெரிக்கா உறவு மேலும் மோசமாகும் என்றும், இது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கும் பாதிக்கப்படுவார்கள் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

    English Summary

    Trump's New Chief of Staff Stephen Miller: There are some individuals in the United States who work against India. U.S. President Donald Trump has elevated one such person to a key position.