இந்திய மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய டிரம்ப் உத்தரவு.. அதிரடி தடை விதித்த நீதிமன்றம்!

  • வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால், இடையில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் போட்ட உத்தரவு காரணமாக, மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. தற்போது டிரம்பின் உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

    Advertisement

    அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய விசா கட்டுப்பாட்டு விதியை நாடு தழுவிய அளவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இன்று டிரம்பின் உத்தரவு அமலாக இருந்த நிலையில், நேற்று நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி எஃப்.டென்னிஸ் செய்லர், தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

    Advertisement

    டிரம்பின் திட்டம்

    புதிய விதிமுறைகளின்படி வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள், அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை மட்டுமே அமெரிக்காவில் தங்கி படிக்க முடியும். ஆனால், ஆராய்ச்சி படிப்பை முடிக்க குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும். அப்படி இருக்கையில் வெறும் 4 ஆண்டுகள் என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். மற்ற நாட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் 4 ஆண்டுகள். அதுவே சீன நாட்டு மாணவர்கள் எனில், இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி.

    பத்திரிகையாளர்களுக்கும் கட்டுப்பாடு

    அதேபோல வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அதிகபட்சமாக 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க முடியும். குறிப்பாக சீன பத்திரிகையாளர்கள் எனில் 90 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்க முடியாது. விசா காலத்தை நீட்டிக்க விண்ணப்பிக்கலாம் என்றாலும், அதை ஏற்பதும் நிராகரிப்பதும் முழுக்க முழுக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளின் விருப்பத்தை பொறுத்தது. மேலும், நிராகரிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்பதுதான் டிரம்ப் கொண்டு வந்த புதிய விதிமுகைள்.

    Advertisement

    கல்வியாளர்கள் வாதம்

    கல்வியாளர்கள் பலரும் இந்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக ஹார்வர்ட் தலைவர் ஆலன் எம்.கார்பர், "எங்கள் கல்வி நிலையத்தில் வழக்கமான PhD படிப்பை முடிக்கவே குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும்போது, விசாவுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி என்று நிர்ணயிப்பது விசித்திரமாக இருக்கிறது" என்று நீதிமன்றத்தில் வாதாடினார்.

    நீதிபதி அதிரடி உத்தரவு

    இந்த வாதங்களை எல்லாம் கேட்ட நீதிபதி, இன்று டிரம்பின் அறிவிப்பு சட்டமாக அமலாக இருந்த நிலையில், அதற்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். அமெரிக்கா முழுவதும் உள்ள 5,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் நீதிபதி அறிவித்திருக்கிறார். இதனால், மாணவர்களும் கல்வியாளர்களும் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

    Advertisement

    உள்நோக்கம் வேறு

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, அரசு இந்த விதியை கொண்டு வந்தாலும், அரசாங்கத்தை அல்லது அதிகாரிகளை விமர்சிக்கும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் விசாக்கள் இதன் மூலம் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நீதிபதி கவலை தெரிவித்தார். இந்த விதியின் உண்மையான நோக்கம் தேசிய பாதுகாப்பு அல்லது என்றும்.. கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிப்பதே என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

    நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் பழைய விசா நடைமுறையே தற்போதைக்கு தொடரும். வழக்கு நீதிமன்றத்தில் முழுமையாக விசாரிக்கப்படும் வரை, டிரம்பின் கட்டுப்பாடுகள் அமலுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Trump: Many students from countries including India are pursuing their studies in the United States. However, a situation arose where their education was jeopardized due to an order previously issued by U.S. President Donald Trump. Now, a U.S. court has issued a significant ruling against Trump's order.