சவுதியை விடக்கூடாது.. தூண்டிவிடும் UAE.. ஹவுதிகள் துல்லியமாக தாக்குவது எப்படி? கசிந்த உளவு தகவல்

  • வாஷிங்டன்: சவுதி அரேபியா மீது துல்லியமாக ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய உளவுத்துறை தகவல்கள் தான் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது

    Advertisement

    சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலை சவுதி அரேபியாவால் தடுக்க முடியவில்லை. 'மெக்கா' ஒப்பந்தப்படி பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவி செய்தாலும் கூட ஹவுதிகளின் ஏவுகணைகள், ட்ரோன்கள் சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை துல்லியமாக தாக்கி வருகின்றன.

    Advertisement

    நேற்று வரை சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஹவுதிகள் பாலிஸ்டிக் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வளாகம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.

    ஹவுதிகளின் இதுவரை நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹவுதிகள் விடாமல் அடிப்பதால் சவுதி அரேபியா திணறி வருகிறது. இந்நிலையில் தான் ஹவுதிகள் எப்படி சவுதி அரேபியாவை துல்லியமாக தாக்கி வருகின்றன? என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் தான், சவுதி அரேபியாவை தாக்க ஹவுதிகளுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய உளவுத்துறை தகவல்களை வழங்கி உள்ளதாகவும், இதனால் தான் ஹவுதிகள், சவுதி அரேபியாவை தாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக Drop Site News எனும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    Advertisement

    அதில், ''ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக சவுதி அரேபியா குறித்த உளவு தகவல்களை ஹவுதிகளிடம் பகிர்ந்து வருகிறது. ஹவுதிகளின் தலைவராக இருக்கும் அன்சரல்லா, ஐக்கிய அரபு அமீரகத்துடன் நல்ல உறவு வைத்துள்ளார். தனிப்பட்ட முறையில் அடிக்கடி இருதரப்பும் பேசி வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகமும், அமெரிக்காவிற்கு நட்பு நடாக இருக்கிறது. அதேவேளையில் ஹவுதிகள் ஈரான் ஆதரவில் அமெரிக்காவை எதிர்த்து செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் ஐக்கிய அரபு அமீரகம் எப்படி சவுதி அரேபியாவை தாக்க ஹவுதிகளுக்கு உளவு தகவல்களை வழங்கும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

    Advertisement

    இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அது என்னவென்றால் ஏமனில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என்பதில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே போட்டி உள்ளது. இதில் சவுதி அரேபியா ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாகவும், ஐக்கிய அரபு அமீரகம் எஸ்டிசி எனும் தெற்கு இடைக்கால கவுன்சில் கிளர்ச்சியாளர்களுக்கும் ஆதரவாக உள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியா, ஏமனில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு படைகள் மீது தாக்குதல் நடத்தியது. சவுதி அரேபியாவின் விமானப்படை விமானங்கள் தெற்கு ஏமனில் நுழைந்து எஸ்டிசி படைகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்தது. ஏமனில் உள்ள ஹத்ரமாவுத் மாகாணத்தில் ராணுவ நிலைகளை எஸ்டிசி மீண்டும் கைப்பற்ற முயன்ற நிலையில் இந்த வான்வெளி தாக்குதலை சவுதி அரேபியா நடத்தியது. இதனால் கோபமான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவை பழிவாங்க ஹவுதிகளுக்கு உளவு தகவல்களை பகிர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English Summary

    The Houthis have been carrying out precise attacks against Saudi Arabia. A startling revelation has emerged suggesting that the primary reason for this is intelligence information provided by the United Arab Emirates.