பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ்

  • வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டிருந்த கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதாக அவர் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிபர் டிரம்ப், "எண்ணெய் தடையின்றி பாயட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    Advertisement

    முக்கிய அம்சங்கள்

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால மோதலுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த அமைதி ஒப்பந்தம் முழுமையடைந்துள்ளது. ஒப்பந்தம் காரணமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும், எரிசக்தி விலைகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தலைவர்கள் பலரும் இந்தத் திடீர் திருப்பத்தை வரவேற்றுள்ளனர்.

    Advertisement

    ஆனால் அதேநேரம், ஹார்முஸ் ஜலசந்தி இனி நிரந்தரமாக சுங்கக் கட்டணம் இல்லாத பாதையாக இருக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அதாவது, ஹார்முஸ் ஜலசந்தியில் இனி கப்பல்கள் எவ்வித தடையுமின்றி, கூடுதல் கட்டணங்களுமின்றி பயணிக்க முடியும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால், ஈரான் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த டோல் கட்டணம் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. இப்படி இருக்கையில் ஒப்பந்த்தின்படி டோல் கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால், ஈரானுக்கு இழுது பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

    இப்போதைக்கு ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் ஒகே சொல்லியிருந்தாலும், ஜூன் 19ம் தேதிதான் இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்து போடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Topics: #us #iran #trump

    English Summary

    US President Donald Trump has announced that a historic peace agreement has been reached between the United States and Iran. Following this agreement, he has ordered the immediate lifting of the naval blockade imposed in the Strait of Hormuz.