ஈரானால் இனி எழும்பவே முடியாது.. சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தக லைசென்ஸை ரத்து செய்த டிரம்ப்! போச்சே

  • டெஹ்ரான்: போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு நடுவே மீண்டும் ஈரான் - அமெரிக்கா மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மீண்டும் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் சர்வதேச மார்க்கெட்டில் ஈரான் தனது கச்சா எண்ணெய்யை அமெரிக்க டாலரில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட உரிமத்தை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளது.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா இடையே சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரானுக்கு சில சலுகைகளை அமெரிக்கா வழங்கி இருந்தது. ஈரான் மீது பொருளாதார தடைகள் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இது தளர்த்தப்பட்டது.

    Advertisement

    அதன்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈரான் இனி சர்வதேச சந்தையில் தனது கச்சா எண்ணெய்யை அமெரிக்கா டாலரில் விற்பனை செய்து கொள்ளலாம் என்று டொனால்ட் டிரம்ப் அனுமதி கொடுத்தார். ஈரான் கச்சா எண்ணெய் வளமிக்க நாடு என்பதால் இந்த அனுமதி அந்த நாட்டுக்கு பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

    எளிதாக தனது கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தை வழியாக பிற நாடுகளுக்கு விற்பனை செய்து பொருளாதாரத்தை பெருக்க முடியும் என்ற நிலை வந்தது. ஆனால் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டி இந்த அனுமதியை தற்போது டொனால்ட் டிரம்ப் அதிரடியாக ரத்து செய்துள்ளார். இதற்கான உத்தரவு நள்ளிரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த உத்தரவில், ''போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் அமெரிக்கா டாலரில் தனது கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளில் (வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்) ஈரான் ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Amidst the ceasefire agreement, Iran and the US have once again engaged in reciprocal attacks, escalating war tensions between the two nations. Against this backdrop, Donald Trump has revoked the license that allowed Iran to sell its crude oil in US dollars on the international market.