அமெரிக்காவில் என்னங்க நடக்குது! சரிந்த வேலையின்மை விகிதம்! அதுக்குள்ள மாற்றம் வந்துடுச்சா?

  • வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது உள்ள கோபம் காரணமாக, மக்கள் எக்குத்தப்பாக அவருக்கு எதிராக ஓட்டு போட்டு தள்ளினர். இதனால் மாற்றம் ஏற்படும் என்றம் எதிர்பார்த்தனர். மாற்றம் வந்தது.. ஆனால் ட்விஸ்ட். அதாவது தேர்தல் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறைய தொடங்கியிருக்கிறது.

    Advertisement

    அதாவது டிரம்ப் மீது அவசரப்பட்டு மக்கள் கோபப்பட்டு விட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர். டிரம்ப் என்ன அவ்வளவு நல்லவரா? என்ன நடந்தது அமெரிக்காவில்..? வாங்க பார்ப்போம்!

    Advertisement

    என்னடா நச நசனு.. என்று சொல்லும் அளவுக்குதான் டிரம்ப் ஆட்சி இருந்தது. அந்த பக்கம் திரும்பினால் ஈரான் போர். இந்த பக்கம் திரும்பினால் உக்ரைன் போர். பின்னாடி பார்த்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எட்டி பார்த்தால்.. வீட்டு வாடகை, மளிகை பொருட்கள் விலை உயர்வு. சரி மேலே பார்ப்போம் என்று தலையை தூக்கினால்.. நட்பு நாடுகளுக்கு எதிராக வரியை போட்டது என.. இந்த 2 வருஷத்தில் டிரம்ப் மிச்சம் வைக்காத எதுவும் இல்லை என்கிற அளவுக்கு ஆடிவிட்டார்.

    ஆட்டமா.. தேரோட்டமா என்கிற பாடலுக்கு ஆடாத குறை மட்டும்தான். இதையெல்லாம் பார்த்த அமெரிக்க மக்கள், இடைக்கால தேர்தல் வரட்டும் என்று காத்திருந்து.. மொத்தமாக செஞ்சு விட்டிருக்கிறார்கள். டிரம்ப் கட்சி தோல்வி.

    Advertisement

    ஆனால், இங்குதான் ஒரு ட்விஸ்ட்! எந்த ஆட்சி சரியில்லை என்று சொன்னார்களோ.. அதே டிரம்பின் ஆட்சியில் கடந்த மாதம் மட்டும் 1.65 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அட ஆமாங்க.. செப்டம்பர் மாதத்தில் 29,000 புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 60,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அக்டோபரில். 65,000 புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்.. 1.65 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தற்போது டேட்டாக்கள் வெளியாகியுள்ளன.

    தமிழ்நாட்டில் வேலையின்மை சதவீதம்! இந்தியாவில் எத்தனையாவது இடம் தெரியுமா? முதலிடத்தில் இந்த மாநிலமா?
    Advertisement

    இதன் காரணமாக முன்னதாக இருந்த 4.2% வேலையின்மை விகிதம் இப்போது 4.1% ஆக குறைந்தது. வருவாய் வளர்ச்சியும் 3.1% என வளர்ந்திருக்கிறது.

    ஆனால்.. இதையெல்லாம் பார்த்து டிரம்பை நம்பிவிட முடியாது. என்னதான் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியதாக சொல்லப்பட்டாலும்.. தொழிலாளர்களின் ஊதிய உயர்வை (3.1%) விட பணவீக்கம் (3.7%) அதிகமாக உள்ளது. எனவே இன்னும் மக்கள் கடும் நெருக்கடியில்தான் இருக்கிறார்கள்.

    ஆரம்பத்தில் டிரம்புக்கு எதிராக அவசரப்பட்டுவிட்டோமா! என்று மக்கள் நினைத்தாலும்.. இன்னும் நிலைமை மாறவில்லை என்பதை உணர்ந்து.. டிரம்புக்கு எதிராக வாக்களித்தது சரிதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    ம்ம்.. இருக்கட்டும்! நம்மூரிலும் தான் பணவீக்கம் எகிறியிருக்கிறது!

    Topics: #us #job #jobs

    English Summary

    US Economy: Driven by anger toward U.S. President Trump, people cast their votes against him in a decisive manner, hoping for change. Change did come—but with a twist: the U.S. unemployment rate had actually begun to decline a full month before the election even started.