'எண்ட் கேம்'.. ஈரானுக்கு எதிரான கடைசி தாக்குதலை அறிவித்தது அமெரிக்கா! உச்சக்கட்ட பதற்றம்!

  • வாஷிங்டன்: கடந்த சில நாட்களாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது இந்த மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கும் வகையில், 'எகனாமிக் டி-டே' என்கிற பெயரில் மாபெரும் நிதி தாக்குதலை அமெரிக்க நடத்தப்போவதாக.. அந்நாட்டின் நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்திருக்கிறார்.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ஈரானுக்கு எதிரான தனது போரில் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக பெசென்ட் கூறியுள்ளார். "விடியற்காலையில் பொருளாதார டி-டே தொடங்குகிறது. இது எதிரிக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப்பெரிய நிதி தாக்குதலாகும்" என பெசென்ட் தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

    டிரம்ப் ஏற்கெனவே ஈரானின் ராணுவ பலத்தை 100% காலி செய்துவிட்டதாகவம், ஈரானின் ராணுவ தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட உற்பத்தி 0% ஆக குறைந்துவிட்டதாகவும், அணுசக்தி திட்டத்தையும் காலி செய்துவிட்டதாவும் பெசென்ட் கூறியிருக்கிறார். ஈரான் கொடுங்கோல் ஆட்சி செய்து வருவதாகவும், இந்த ஆட்சிக்கு உதவும் ஒவ்வொரு பொருளாதார வழிகளை கட் செய்வதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    அமெரிக்காவின் பொருளாதார தாக்குதல் நடவடிக்கை, ஈரானை சர்வதேச அளவில் தனிமையாக்கும் என்று சொல்லப்படுகிறது. ஈரான் தனது பாதுகாப்பை மிரட்டல் ஆயுதமாக பயனப்படுத்திய காலம் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள பெசென்ட்.. அமெரிக்காவை சோதித்தால் என்ன நடக்கும் என்பதை ஈரான் மீதான தாக்குதலை பார்த்து புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அமெரிக்காவின் எச்சரிக்கையின்படி, ஒருவேளை இந்த பொருளாதார தாக்குதல் நடக்கிறது எனில்.. பர்ஷியன் வளைகுடா வழியாக நடக்கும் அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததற்கும்.. E20 பெட்ரோல் வந்ததற்கும் காரணமே அமெரிக்காதான். சும்மா இருந்த ஈரான் மீது தாக்குதல் நடத்துகிறேன் என்று சொல்லி மொத்த எண்ணெய் ஏற்றுமதிக்கும் அமெரிக்கா பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த பாதிப்பு இப்போது வரை சரியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    US enters Iran endgame: Amidst the ongoing conflict between the United States and Iran over the past few days, the US has announced that the confrontation has now reached a critical stage. This has led to heightened tension in the Middle East.