3 வருஷத்துக்கு அப்புறம்.. அமெரிக்கா கொண்டு வந்த மாற்றம்! பெரிய சூழலில் சிக்கப்போகும் இந்தியா!

  • வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி 2023க்கு பிறகு தற்போது முதல்முறையாக ஃபெடரல் வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரத்தின் போக்கு மாறப்போகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    மாஸ்கோவில் மழை பெய்தால்.. நம்மூர் ஆட்கள் மயிலாப்பூரில் குடை பிடிப்பார்கள் என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு. மாஸ்கோவுக்கும், மயிலாப்பூருக்கும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ.. ஆனால் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி உயர்வுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

    Advertisement

    அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. அட ஆமாங்க.. டிரம்ப் ஆட்சியில்தான்! இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஒரே வழிதான்! ஃபெடரல் வட்டியை உயர்த்துவது. இப்படி செய்தால், வங்கி கடனின் EMI அதிகரிக்கும், கடன் வாங்குவதே ரொம்ப காஸ்ட்லியான வேலையாக மாறும். இதனால் பணத்திற்கான டிமாண்ட் குறைந்து.. பணவீக்கம் குறையும். இதனால் இந்தியாவுக்கு நெகட்டிவ் மாற்றம் ஏற்பட இருக்கிறது.

    அதாவது அமெரிக்கா வட்டியை அதிகரிக்கிறது எனில், அந்நாட்டு அரசு பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். எனவே உலகம் முழுவதும் இருக்கும் முதலீட்டாளர்கள் அமெரிக்காவை நோக்கி நகர்வார்கள். இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் பெரிய முதலைகள்.. சட்டென தங்கள் பணத்தை தூக்கிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிடுவார்கள். இதனால், இரண்டு விஷயம் நடக்கும்.

    Advertisement

    1. அமெரிக்க டாலர் வலுவடையும்
    2. இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்

    டாலர் வலுவடைகிறது எனில், நாம் டாலர் கொடுத்து வாங்கும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். கச்சா எண்ணெய்யை நாம் அமெரிக்க டாலரில்தான் வாங்குகிறோம். எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல், போக்குவரத்து செலவு, உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ், பெயிண்டஸ், கெமிக்கல்ஸ் போன்ற துறைகளில் விலைவாசி எகிறும்.

    இந்தியாவின் 10 ஆண்டுகால அரசுப் பத்திரங்களின் வருவாய் ஏற்கெனவே 7%க்கும் மேல் அதிகரித்திருக்கிறது. உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் ரூபாய் வீழ்ச்சியை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியும் தனது ரெப்போ விகிதத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகலாம். இதனால் நம் நாட்டில் உள்ள வங்கிகளிலும் வீடு வாகன கடன்களுக்கான EMI அதிகரிக்கும்.

    Advertisement

    இப்படியெல்லாம் நடப்பதால் இந்திய சந்தை உடனடியாக வீழ்ச்சியடையும் என்று பயப்பட தேவையில்லை. இருப்பினும்.. சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறுகிய கால வர்த்தகர்கள் இந்த ஏற்ற இறக்கங்களை உரு வாய்ப்பாக பயன்படுத்தலாம். ஆனால், 10-15 ஆண்டுகள் என்ற நீண்ட கால இலக்கை கொண்ட முதலீட்டாளர்கள் தினசரி செய்திகளை கண்டு பீதியடையாமல் தங்களின் நிதி திட்டதத்தை தொடர்ந்து பின்பற்றுவதே சரியான உத்தியாகும்.

    Topics: #india #us

    English Summary

    India: The US Federal Reserve has raised the federal interest rate for the first time since 2023. Experts have warned that this move is set to alter the trajectory of the Indian economy.