அரபு நாடுகளுக்கு அமெரிக்கா வார்னிங்.. மீண்டும் ஈரானை தாக்க ரெடியான டிரம்ப்.. மீண்டும் பதற்றம்

  • வாஷிங்டன்: ''மீண்டும் ஈரானை நாங்கள் தாக்க வாய்ப்புள்ளது. இந்த தாக்குதல் குறுகிய நாட்களில் அதேநேரத்தில் தீவிரமான போராக இருக்கும். இதனால் உங்கள் நாடுகளின் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும்'' என்று மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுரையோடு வார்னிங் கொடுத்துள்ளது.

    Advertisement

    ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இதற்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து படைகளின் இருப்பை அதிகரித்து வருகிறது.

    Advertisement

    நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு ஈரான் மீது அமெரிக்கா புதிய போரை தொடங்க திட்டமிட்டு வருகிறது.

    அமெரிக்கா, ஈரானை தாக்கினால் பதிலுக்கு ஈரான் மத்திய கிழக்கில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து 'அட்டாக்' செய்யும். இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ''அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் 3ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நீண்ட காலம் நீடிக்காது. குறுகிய காலத்தில் தீவிரமான தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது.

    Advertisement

    இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அவருடைய ஒப்புதலுக்காக இதுதொடர்பான ஆவணங்கள் காத்திருக்கின்றன. இடைக்கால தேர்தலக்கு பிறகு ஈரானை தாக்க டிரம்ப் ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளது.

    ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறது. ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக தான் இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது. ஈரானின் ராணுவ திறன்களை பலவீனப்படுத்தி அந்த நாட்டை பேச்சுவார்த்தை மேஜையில் அமர வைப்பது தான் இந்த தாக்குதலின் நோக்கம்.

    இதனால் நட்பு நாடாக இருக்கும் நீங்கள் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஈரானின் எந்தவொரு தாக்குதலையும் தடுக்கும் வகையில் வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.

    Advertisement

    அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு சொந்தமான கடற்படை தளம், விமான தளம் மற்றும் ராணுவ தளம் உள்ளன. இங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து பேட்ரியாட் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு நகர்த்தி வருகிறது.

    அதேபோல் ஈரான் தாக்குதலுக்கு உள்ளாகும் அமெரிக்க தளங்களில் இருந்து வீரர்கள் பிற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகளுடன், போர் விமானங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டும் தற்போது 20 அமெரிக்க போர்க்கப்பல்கள் உள்ளன. இதனுடன் விரைவில் இன்னொரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் இணைய உள்ளனர்'' என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    "We are going to attack Iran again. This will be an intense conflict, though it will last only a few days. You should therefore take the necessary security precautions in your respective countries," the United States has advised—and warned—Arab nations in the Middle East.