அமெரிக்கர்கள் உஷாரா இருக்கனும்.. வெடிக்கப்போகும் உலகப்போர்? டிரம்ப் கொடுத்த ஹை அலர்ட்!

  • வாஷிங்டன்: மத்திய கிழக்கு முழுவதும் இப்போது சுத்தமாக நிலைமை சரியில்லை. எப்போது வேண்டுமானாலும் விமானங்கள் கேன்சல் செய்யப்படலாம். எனவே, அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இது மத்திய கிழக்கில் ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சவுதி மற்றும் ஹவுதிகளுக்கு இடையே மோதல் இப்போது தீவிரமடைந்திருக்கிறது. நிலைமை முன்கூட்டியே கணிக்க முடியாதவாறு மாறியிருக்கிறது. யார் எங்கே குண்டு வைப்பார்கள் என்று தெரியாது. எனவேதான் அமெரிக்கா இந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.

    Advertisement

    அமெரிக்கா விடுத்திருக்கும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பதற்றம் மற்றும் சவுதி-ஹவுதி மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றன. எனவே மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் தீவிர கண்காணிப்புடன் இருக்குமாறும், விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இஸ்ரேல், சவுதி, ஜோர்டன், கத்தார் உட்பட மத்திய கிழக்கில் உள்ள 11 அமெரிக்க தூதரங்கள் தங்களின் இணையதளங்கள் வழியே இந்த ஒருங்கிணைந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையை பார்க்கும் போது மத்திய கிழக்கில் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்று அச்சம் எழுந்திருக்கிறது.

    Advertisement

    குறிப்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்துக்கொண்டு சவுதிக்கு ஆதரவாக ஏமன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி தலைநகரான ரியாத் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். ரியாத் விமான நிலையம் அருகே பலத்த வெடிச்சத்தமும் கரும்புகையும் எழுந்ததாக செய்திகள் வெளியாகின. சவுதி கூட்டுப்படையினர் இந்த ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    இருந்தாலும், இந்த பிரச்சனையை அப்படியே விட்டால்.. நிலைமை மோசமடைந்துவிடும் என்கிற அச்சம் இருக்கிறது. எதிர்பார்த்தபடியே ஹவுதி கிளர்ச்சியனர் சிவிலியன் விமான நிலையங்களை குறி வைத்திருக்கின்றனர். எனவே இஸ்ரேலுடன் சேர்ந்துக்கொண்டு அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ஏமனில் அட்டாக்கை நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் முன்னெச்சரிக்கையாக இந்த வார்னிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    நேற்றிரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென முக்கிய மீட்டிங்கை நடத்தியிருக்கிறார். இந்த மீட்டிங் ஏமனில் தாக்குதல் நடத்ததான் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    English Summary

    US: The situation across the Middle East is currently far from stable. Flights could be cancelled at any moment. Consequently, the US government has advised Americans to stay safe. This is being viewed as a sign that a major incident is likely to occur in the region.