ஈரான் மரணஅடி.. அமெரிக்காவின் 81 போர் விமானங்கள் - நவீன ட்ரோன்கள் காலி.. ரூ.31,942 கோடி போச்சே

  • வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரான் போரில் அமெரிக்கா ரூ.31,942 கோடி மதிப்பிலான போர் விமானங்கள், நவீன ட்ரோன்களை இழந்ததாக புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கின. இது போராக மாறியது. இந்த போர் ஏப்ரல் 8 ம் தேதி முடிவுக்கு வந்தது.

    Advertisement

    அதன்பிறகும் கூட அவ்வப்போது ஈரான் - அமெரிக்க நாடுகள் மாறி மாறி தாக்கி கொண்டன. அடுத்த மாதம் அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. டொனால்ட் டிரம்ப் தற்போது இந்த தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தற்போது இருநாடுகள் இடையே சண்டையில்லாமல் உள்ளது.

    இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஈரானுடன் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா பல போர் விமானங்கள், நவீன ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் என்று 81யை பறிகொடுத்துள்ளதாம். இதனை அமெரிக்காவின் காங்கிரஷனல் ரிசர்ச் சர்வீஸ் (Congressional Research Service) உறுதி செய்துள்ளதாக
    'நியூயார்க் போஸ்ட்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

    Advertisement

    ஈரான் போரில் அமெரிக்கா தனது அதிநவீன போர் விமானங்கள், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்களை இழந்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் எஃப் 15 இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம் 12, எஃப் 35ஏ லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம் உள்பட கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.

    30 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள 3 அதிநவீன போர் விமானங்கள் மார்ச் 2ம் தேதி குவைத்தில் நடந்த Friendly Fire-யில் சுட்டு வீழ்த்தப்பட்டது. பிறகு எஃப்-15இ ரக போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. மார்ச் 19ல் ஈரான் நடத்திய தாக்குதலில் எஃப் - 35 ஏ ரக லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம் சேதமடைந்தது.
    செப்டம்பர் 9, 10 தேதிகளில் ஈரான் தாக்குதலில் ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படை தளத்தில் 8 எஃப் 15 இ விமானங்கள் சேதமானது.

    Advertisement

    அதேபோல் 45 எம்க்யூ - 9 ரீப்பர் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் அதிநவீன ட்ரோன்களாகும். உளவு பார்த்தல், கண்காணிப்பு மற்றும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவையாக இந்த ட்ரோன்கள் உள்ளன. 45 ரீப்பர் ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளதால் தற்போது அதன் எண்ணிக்கை 135 ஆக சரிந்துள்ளது. .

    இப்படியாக மொத்தம் 81 வான்வெளி தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்களை ஈரான் போரில் அமெரிக்கா இழந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 3.3 பில்லியன் அமெரிக்க டாலராகும். 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாயில் ரூ.31,942.29 கோடியாகும். அமெரிக்கா இழந்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர், ட்ரோன்களின் லிஸ்ட் பின்வருமாறு:

    Advertisement

    எஃப் 15 இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம் -12
    எஃப்35ஏ இலகுரக II ஸ்டெல்த் போர் விமானம் - 1,
    ஏ 10 தண்டர்போல்ட் II அட்டாக் போர்விமானம் -2
    கேசி -135 ஸ்ட்ராடோ டேங்கர்ஏரியல் ரிபியூலிங் விமானம் - 7
    இ3 சென்ட்ரி சர்வைலன்ஸ் விமானம் - 1
    எம்சி 130 ஜே கமாண்டோ II ஸ்பெஷல் ஆபரேஷன் போர் விமானம் -2

    எம்க்யூ - 4 சி திரிட்டன் ஹை - அல்டிடியூட் சர்வைலன்ஸ் ட்ரோன் - 1
    எம்க்யூ - 1 மல்டி ரோல் ட்ரோன் - 3
    ஏஎச் - 64 அப்பாச்சி அட்டாக் ஹெலிகாப்டர் - 1
    ஏஎச் - 6 லிட்டில் பேர்ட் லைட்அட்டாக் ஹெலிகாப்டர் - 4
    எம்எச் - 60 சீ ஹவாக் மரிடைம் ஹெலிகாப்டர் - 1
    எம்க்யூ - 9 ரிப்பர் ட்ரோன்கள் - 45 உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
    இதில் சில விமானங்கள் லேசாக மட்டுமே சேதமடைந்து இருந்தன. இந்த விமானங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு மீண்டும் பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Reports indicate that the United States suffered significant losses in the conflict with Iran. Statistics reveal that the U.S. lost fighter jets and advanced drones worth Rs.31,942 crore during the war.