வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, அங்கு பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களை சார்ந்துள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அமெரிக்க நாடாளுமன்றம் ஜனநாயக கட்சியின் கண்டரோலுக்கு சென்றுவிட்ட நிலையில், இனி H-1B விசா கட்டுப்பாடுகள் தளர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் இன்று நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகின. விலைவாசி உயர்வு, பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை, ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜனநாயக கட்சி மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜனநாயகக் கட்சி வசம் சென்றது.
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவின் வர்த்தகம், விசா மற்றும் வெளியுறவு கொள்கைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக வரிகள் மற்றும் குடியேற்ற கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய நிறுவனங்களும் அண்மை காலமாக பல்வேறு சவால்களை சந்தித்து வந்தனர். இந்தச் சூழலில் ஜனநாயக கட்சி வென்றுள்ளது டிரம்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது.. அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கான H-1B விசா தொடர்பான விவகாரம் மிகவும் முக்கியமானது. திறமையான வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு, குறிப்பாக தொழில்நுட்ப துறைக்கு, டிரம்ப் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் திட்டம் அமெரிக்க நிறுவனங்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தில் வென்றுள்ளது நிலைமையை மாற்றும். டிரம்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போடும். இது இந்திய ஐடி ஊழியர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடும். அதேநேரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகார மாற்றம் மட்டுமே டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கைகளை உடனடியாக மாற்றிவிடாது. குடியேற்றம் தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அதிபரிடமே உள்ளது. எனவே, H-1B விசா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்று இப்போதே கூற முடியாது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவிலும் இந்த தேர்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தலாம். டிரம்ப் விதித்த கடுமையான வர்த்தக வரிகள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தன. இந்த வரி ஒரு கட்டத்தில் 50% வரை போனது. பிறகு அது 18%ஆக குறைக்கப்பட்டது. அதேநேரம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் தடைகளை உருவாக்கி வருகிறது. இதிலும் இப்போது மாற்றம் வரலாம். டிரம்ப் விதித்துள்ள வரிகளால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கும் என சொல்லி அழுத்தம் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவுடனான வர்த்தக உறவு ஓரளவு சீராகலாம். அதேபோல அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் விசாவுக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலே இப்போது இருக்கிறது. அந்த நிலையிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் பிரஷர் போடும் என்பதால் விசா பிராசஸ் செய்யும் காலம் வெகுவாக குறையலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் இந்திய ஐடி ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வராது என்றாலும் கூட தளர்வுகளை சீராக்கும்.இந்தியா
“வீடு, கார் வேண்டாம்.. உயிரோடு போனால் போதும்!” அமெரிக்கக் கனவைக் கைவிட்டு தப்பி ஓடும் இந்தியர்கள்!
H-1B விசா
லிஸ்டில் இந்தியர்கள் அதிகம் வேலை செய்யும் 6 நிறுவனங்கள்.. இனி H-1B விசா வாங்கவே முடியாதாம்! சிக்கல்
வர்த்தக வரிகள்
அடுத்து என்ன