அமெரிக்க தேர்தல்.. டிரம்புக்கு பெரிய ஆப்பு? ஆரம்பத்திலேயே ரேசில் முந்தும் ஜனநாயக கட்சி

  • வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரங்கள் வெளியாக தொடங்கியுள்ள நிலையில், ஆரம்ப கட்டங்களில் ஜனநாயக காட்சி முன்னிலை பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசுக்கட்சி பின் தங்கியுள்ளது. இதே நிலை தொடருமா? இல்லை முன்னிலை நிலவரங்கள் மாறக்கூடுமா? என்பது போக போக தெரியும்.

    Advertisement

    தற்போதைய நிலவரப்படி, செனட் சபை தேர்தலில் டிரம்பின் குடியரசுக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி 36 இடங்களிலும், ஜனநாயகக் கட்சி 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    Advertisement

    பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி 101 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசுக்கட்சி 55 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

    அமெரிக்க இடைக்கால தேர்தல்

    அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இடைக்கால தேர்தல் என்று அழைக்கப்படும் இந்த தேர்தல், டிரம்பின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கக்கூடிய இடைக்கால தீர்ப்பாக இருக்கும் என்பதால் அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலக நாடுகளே உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.

    இன்று மாலைக்குள் முடிவுகள் ஓரளவுதெரியவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இரு அவைகளிலும் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அது டிரம்புக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தும். டிரம்பின் எஞ்சிய இரண்டு ஆண்டு பதவி காலத்தில் அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜனநாயக கட்சியால் முட்டுக்கட்டை போட முடியும்.

    Advertisement

    இந்த தேர்தலில் 26 லட்சம் இந்திய வம்சாவளி வாக்காளர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய சக்தியாக உள்ளனர். கென்டக்கி மற்றும் இந்தியானா மாகாணங்களில் முதல் கட்ட வாக்குச்சாவடிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணி) வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் வெளியாக தொடங்கியுள்ளன.

    முடிவுகள் எப்போது?

    அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்களில் நேர வேறுபாடு இருப்பதால் வாக்குப்பதிவு நிறைவடையும் நேரமும் மாறுபடும். வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை உடனடியாக அறிவிக்க முடியாத நிலை ஏற்படலாம். தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட வேண்டியிருப்பதால் சில தொகுதிகளின் முடிவுகள் தாமதமாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பிரதிநிதிகள் சபை - (மொத்தம் 435 இடங்கள்)

    * குடியரசுக் கட்சி - 55 இடங்களில் முன்னிலை
    * ஜனநாயக கட்சி - 101 இடங்களில் முன்னிலை

    செனட் சபை - (மொத்தம் 100 இடங்கள்)

    * குடியரசுக் கட்சி - 36 இடங்களில் முன்னிலை
    * ஜனநாயக கட்சி - 45 இடங்களில் முன்னிலை

    டிரம்புக்கு அக்னி பரிட்சை

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், ஈரான் போர் ஆகியவற்றால் விண்ணை முட்டும் விலைவாசி ஆகிய பிரச்சினைகளுக்கு நடுவே இந்த தேர்தல் நடைபெற்றது. எனவே டிரம்பின் சமீப கால நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்கள் ஆதரவை அளிக்கிறார்களா? இல்லையா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்பதால், டிரம்ப் நிர்வாகத்திற்கு இந்த தேர்தல் முடிவு குடியரசுக்கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை, பிரதிநிதிகள் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. செனட் அவையில் 100 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் 435 உறுப்பினர்களும் உள்ளனர். மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் தலா 2 உறுப்பினர்கள் வீதம் செனட் சபைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

    2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செனட் சபையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு இடைக்காலத் தேர்தலிலும் 435 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம்.

    English Summary

    US midterm elections: The counting of votes for the U.S. midterm elections is currently underway. As the initial results begin to emerge, the Democratic Party has taken an early lead, while Donald Trump’s Republican Party is trailing. Whether this trend will persist or if the current standings might shift remains to be seen as the process unfolds.