அமெரிக்காவில் இன்று இடைக்கால தேர்தல்.. டிரம்ப் நினைச்சது நடக்குமா? உலகமே உற்றுப்பார்க்கும் எலக்‌ஷன்

  • வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தை யார் கட்டுப்படுத்தப்போவது என்பதை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான தேர்தல் இன்று நடைபெறுகிறது. டிரம்பின் இரண்டு ஆண்டு கால ஆட்சியை அமெரிக்கர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக இந்த தேர்தல் முடிவு அமையும் என்பதால் டிரம்பின் குடியரசுக்கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

    Advertisement

    அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் என்று அழைக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. அமெரிக்கா நாடாளுமன்றத்தை பொறுத்தவரை பிரநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரு அவைகளை கொண்டது. இதில் செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளாகும். பிரதிநிதி சபை உறுப்பினர்களுக்கான பதவி காலம் 2 ஆண்டுகள்.

    Advertisement

    இன்று இடைக்கால தேர்தல்

    மொத்தமுள்ள 435 பிரதிநிதிகள் இடங்களுக்கும், 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையின் 35 இடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு மாகாணங்களின் ஆளுநா்கள் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 2 ஆண்டு கால ஆட்சியில் கடும் விலை வாசி உயர்வு, சர்வதேச அளவிலான பதற்றங்கள் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், அவருக்கு இந்த தேர்தல் ஒரு ஆசிட் டெஸ்ட் ஆகவே இருக்கும் கூறப்படுகிறது.

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்பின் குடியரசுக்கட்சிக்கு சிறிய அளவில்தான் பெரும்பான்மை உள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை. டிரம்பின் குடியரசுக் கட்சி சரியாக 218 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் கத்தி மேல் நடப்பது போல மிகவும் கவனமாக டிரம்ப்பின் குடியரசுக்கட்சி பிரதிநிதிகள் சபையில் செயல்பட வேண்டியுள்ளது.

    Advertisement

    எத்தனை இடங்கள் உள்ளன

    ஜனநாயகக் கட்சி 214 இடங்கள் உள்ளன. செனட் சபையை பொறுத்தவரை பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை. டிரம்பின் குடியரசுக் கட்சி 53 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 47 இடங்களும் உள்ளன.

    அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, புதிய சட்டங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளன. இதனால், டிரம்ப் கட்சிக்கு இங்கு பெரும்பான்மை அவசியம். ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றால் டிரம்பின் நிர்வாகத்திற்கு பல இடங்களில் முட்டுக்கட்டை ஏற்படும்.

    டிரம்புக்கு எதிராக கருத்துக்கணிப்பு முடிவுகள்

    இதனால், இந்த தேர்தலில் டிரம்பின் குடியரசுக்கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. விலைவாசி உயா்வு, பொருளாதாரம் ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. கருத்துக்கணிப்புகள் டிரம்புக்கு எதிராகவே உள்ளன. இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாக்காளர்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு அதிக ஆதரவு தெரிவித்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    Advertisement
    இன்னும் சில மணி நேரம் தான் இருக்கு.. அமெரிக்கா அங்கே எடுக்கும் முடிவு! இங்கே தங்கம் விலை தலைகீழாகும்

    இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனுக்குடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளின் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆகலாம். அதிகாரப்பூா்வமான இறுதி முடிவுகள் வெளியாவதற்குப் பல நாள்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.

    வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்?

    அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப வாக்குப்பதிவு தொடங்கி, நிறைவடையும் நேரம் மாறுபடும். இந்திய நேரப்படி, முதல் வாக்குச்சாவடிகளில் நவம்பர் 4 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுவதால், முடிவுகள் வெளியாக நேரம் பிடிக்கலாம்.

    Advertisement
    ஈரான் மீது இன்று மிகப்பெரிய தாக்குதலுக்கு ரெடியாகும் அமெரிக்கா? டிரம்ப் கருத்தால் எகிறும் பதற்றம்

    அதிகாரப்பூர்வமாக முழுமையான மற்றும் இறுதி முடிவுகள் வெளியாவதற்குப் பல நாள்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் எஞ்சியுள்ள கடைசி 2 ஆண்டுகளுக்கான அரசியல் சூழலையும் இந்த இடைக்காலத் தேர்தல் தீர்மானிக்கும் என்பதால் அமெரிக்கா இடைக்கால தேர்தலை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    English Summary

    US Midterm elections: A crucial election is taking place today that will determine who controls the U.S. Congress. As the outcome will reflect how Americans view the first two years of Donald Trump’s presidency, there is an intense contest between his Republican Party and the Democratic Party.