டிரம்பை உலுக்கிய இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் கேள்வி.. ஆதங்கத்துடன் அமெரிக்க அதிபர் பதிவு

  • வாஷிங்டன்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நமது நிர்வாகத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.. முறையான ஒரு போட்டோ ஐடி கார்டு இன்றி எப்படி அமெரிக்க தேர்தல்களை எப்படி நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். எனவே அமெரிக்காவை பாதுகாப்போம் என்ற சட்டத்தை நாம் உடனே நிறைவேற்ற வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

    Advertisement

    ஞானேஷ் குமாரின் கேள்வி

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய தேர்தல் நடைமுறையை மேற்கோள் காட்டி அதை போன்ற ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்க தேர்தல்களில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடியுரிமை விதிகள் கடுமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் டிரம்பின் இந்த பதிவு அமைந்துள்ளது.

    Advertisement

    தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- இந்த மாத துவக்கத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நமது நிர்வாகத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். முறையான ஒரு போட்டோ ஐடி கார்டு இன்றி எப்படி அமெரிக்க தேர்தல்களை எப்படி நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவில் கடைசி தேர்தல் 64 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுடன் நடைபெற்றது.

    சேவ் அமெரிக்கா சட்டம்

    இதில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். ஏனைய ஒவ்வொரு வாக்காளரிடமும் செல்லுபடியாக கூடிய போட்டோ அடையாள ஆவணம் வைத்து இருக்கிறார்கள். எனவே அமெரிக்காவை பாதுகாப்போம் என்ற சட்டத்தை நாம் உடனே நிறைவேற்ற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிராக டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    Advertisement

    அதேபோல, அமெரிக்காவில் குடியுரிமை பெறும் விதிகளையும் கடுமையாக்கி வரும் நிலையில், சேவ் அமெரிக்கா சட்டம் கொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்திய தேர்தல் நடைமுறையை பாராட்டியுள்ளார். டிரம்ப் முன்மொழியும் SAVE America Act சட்டத்தை பொறுத்தவரை வாக்காளர் பதிவு செய்யும்போது அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தையும், புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும் கட்டாயமாக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.

    சொந்த கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு

    டிரம்ப் முன்மொழியும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் வாக்களிக்க பதிவு செய்யும் வாக்காளர்கள் தங்களது குடியுரிமைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல, நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான விதிமுறைகள் கடும் கெடுபிடியாக்கப்படும். தபால் வாக்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    Advertisement

    தேர்தல் முறைகேடுகள் ஒழிக்கப்படும் என்று கூறிய குடியரசுக்கட்சி, கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி இதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால், இந்த சட்டத்தை கொண்டு வருவதில் ஜனநாயக கட்சி மட்டுமின்றி குடியரசுக் கட்சிக்க்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்த மசோதா நிறைவேற்றுவது தொடர்பான நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான், டிரம்ப் மேற்கண்ட பதிவை வெளியிட்டு இருப்பது, அமெரிக்காவை பாதுகாப்போம் என்ற சட்ட விவகாரம் மீண்டும் அந்நாட்டில் கவனம் பெற்றுள்ளது.

    English Summary

    US President Trump stated that Indian Chief Election Commissioner Gyanesh Kumar raised a question with his administration, asking how US elections are conducted without a proper photo ID card. Consequently, Trump has called for the immediate passage of a law to "Protect America."