மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? கதி என்ன? அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒபன் டாக்

  • வாஷிங்டன்: ஈரான் உச்ச தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு இதுவரை பொதுவெளிக்கு மொஜ்தபா கமேனி வரவில்லை என்பதால் அவரது உடல் நிலை பற்றிய பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. மொஜ்தபா கமேனி உயிரிழந்துவிட்டார் என்பதாக தகவல்கள் பரவிய நிலையில், இது பற்றி பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கமேனி உயிருடன் தான் உள்ளார் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.. இதையடுத்து நாட்டை வழிநடத்த புதிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம் செய்யப்பட்டார். மொஜ்தபா கமேனி பதவியேற்று 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் அவர் இன்னமும் பொதுவெளியில் தலைகாட்டவில்லை.

    Advertisement

    கமேனி கதி என்ன?

    இதனால் அவர் எங்கு இருக்கிறார். அவரது உடல்நிலை என்ன என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:- மொஜ்தபா கமேனி உயிரிழந்து இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மிக கடுமையாக காயம் அடைந்து இருப்பார்.

    உடலின் இடது பக்கம், முழங்கை மற்றும் கால் ஆகிய பகுதிகள் காயம் அடைந்து இருக்கும். அதே நேரத்தில் அவர் உயிரிழந்து இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. மொஜ்தபா கமேனி ஒருவேளை உயிருடன் இல்லையென்றால், ஈரான் மிக சிறந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றி கொண்டு இருக்கிறது" என்றும் டிரம்ப் தனது பேட்டியில் கூறினார்.

    Advertisement

    மொஜ்தபா கமேனியின் குரல்

    மொஜ்பதா கமேனி உடல் நலம் பற்றி வதந்திகள் அதிகரித்த நிலையில் ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில், மொஜ்தபா கமேனியின் குரல் இடம் பெற்று இருந்தது. கமேனி தனது பணியை தொடங்குவதற்கு முன்பாக ஒரு மாணவர் சமர்பித்த ஆய்வறிக்கையை கேட்டு, அதற்கு தனது மதிப்பீட்டை வழங்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக இந்த மாத துவக்கத்தில், மொஜ்தபா கமேனி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும் உடனடியாக அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அயேதுல்லா இறுதிச்சடங்கு நிகழ்விலும் மொஜ்தபா கமேனி கலந்து கொள்ளவில்லை.

    Advertisement

    அலி கமேனியின் பிற மூன்று மகன்கள் பங்கேற்ற போதிலும் மொஜ்தபா கமேனி பங்கேற்காததது, அவரது உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு கூடுதல் வலு சேர்த்தது. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயம் அடைந்ததாகவும் அப்போது முதல் அவர் பொதுவெளிக்கு வரவில்லை என்றும் பல்வேறு தகவல்களும் கூறுகின்றன.

    விரைவில் வெற்றி

    அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 6 மாதத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. விரைவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த பொருளாதார அழுத்தங்கள் பலன் கொடுப்பதாக கூறியிருக்கும் டிரம்ப், விரைவில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறந்து இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

    English Summary

    US President Donald Trump: Speculation regarding Mojtaba Khamenei's health has been circulating, as he has not appeared in public since his reported appointment as Iran's Supreme Leader. Amidst rumors that he had passed away, US President Donald Trump addressed the matter, stating that Khamenei is indeed alive.