சிறிய விமானம்.. சீக்ரெட் பயணம்! ஈரானுக்கு பயந்து வேறு பிளைட்டில் மாறி பயணித்த டிரம்ப்.. என்ன நடந்தது

  • வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து அச்சுறுத்தல் வந்ததை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு ரகசியமாக வேறு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், வழக்கமான விமானத்தை தவிர்த்துவிட்டு சிறிய ரக அமெரிக்க ராணுவ விமானமான C-32A மூலம் பிரிட்டனுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிரம்பிற்கு எதிராக ஈரான் கொலை மிரட்டல் விடுத்திருந்தது. டிரம்ப்பின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்ய போவதாக ஈரான் மிரட்டியிருந்தது.

    Advertisement

    என்ன நடந்தது

    ஈரானின் மிரட்டல்களை தொடர்ந்து டிரம்ப் தனது வழக்கமான விமானத்தை விட்டுவிட்டு சிறிய ரக விமானம் மூலம் துருக்கியில் இருந்து பிரிட்டன் சென்றதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் கடந்த ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவுக்கு நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது கத்தார் வழங்கிய புதிய போயிங் 747-8 விமானத்தில் அவர் பயணம் செய்தார். துருக்கியில் இருந்து புறப்படும் போது அவர் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பிரிட்டன் சென்றதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் வேறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    சிறிய விமானம்

    அதாவது ஜூலை 8ஆம் தேதி துருக்கியின் அங்காராவில் இருந்து புறப்படுவதற்கு முன்பு, டிரம்ப் முதலில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்களின் முன்னிலையில் ஏறியுள்ளார். ஆனால், விமானம் அங்கிருந்து புறப்படவில்லை. மாறாக ஊடகங்கள் எல்லாம் கிளம்பிய பிறகு, விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் கேட்டரிங் வாகனம் ஒன்றின் மூலம் அவர் ரகசியமாக போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய ரக அமெரிக்க விமானப்படை விமானமான C-32A இருக்கும் பகுதிக்கு டிரம்ப் அழைத்து செல்லப்பட்டார்.

    அதன் பின்னர் டிரம்ப் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டு, இரவு சுமார் 10.20 மணியளவில் பிரிட்டனை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டிரம்ப் இல்லாமல்.. செய்தியாளர்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மட்டும் பயணித்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் சில நிமிடங்கள் கழித்து பிரிட்டனை சென்றடைந்தது. இதனால் வெளியே ஊடகங்களுக்கு டிரம்ப் போர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணித்தது போல காட்டப்பட்டது.

    Advertisement

    பின்னணி

    டிரம்ப் விமானத்தை தாக்க போவதாக ஈரான் கூறியிருந்த நிலையில், இதன் காரணமாகவே அமெரிக்க அதிகாரிகள் இந்த ஏற்பாடுகளை செய்திருந்ததாக அந்நாட்டை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. துருக்கி ஈரானுடன் நேரடியாக எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடு என்பதால், டிரம்பின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    டிரம்ப் துருக்கி சென்ற விமானம் கத்தார் வழங்கிய புதிய போயிங் 747-8 ஆகும். இந்த விமானம் சமீபத்தில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, அதிபரின் பயணத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது. டிரம்ப் ஏற்கெனவே அமெரிக்காவின் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். 1990ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் அந்த விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானம் தேவை என அவர் கூறியிருந்தார். ஆனால், கத்தார் வழங்கிய விமானத்தில் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் இருந்த சில பாதுகாப்பு வசதிகள், குறிப்பாக ஏவுகணை எதிர்ப்பு வசதி உள்ளிட்டவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    வெள்ளை மாளிகை

    டிரம்ப் மற்றும் அவரது டீமின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியூங் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு எதிரான பல எதிரிகள் அதிபரை குறிவைத்து வருவதாகவும், அவரை பாதுகாக்க அனைத்து வழிகளையும் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் டிரம்ப் உண்மையில் C-32A விமானத்தில் இருந்து மீண்டும் பெரிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்துக்கு எப்போது, எப்படி மாற்றப்பட்டார் என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    English Summary

    Donald Trump reportedly switched from Air Force One to a smaller US Air Force C-32A aircraft(டிரம்ப் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல்): Donald Trump Secretly issue latest news in tamil.