அடங்காத அமெரிக்கா.. ஈரானுக்கு உதவிய இந்திய தம்பதி + இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை! பின்னணி

  • வாஷிங்டன்: ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு உதவியதாக கூறி தொழிலதிபராக இருக்கும் தம்பதி உள்பட 4 இந்தியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா திடீரென்று பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    Advertisement

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள், நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ஈரானை எடுத்து கொண்டால் கச்சா எண்ணெய் வர்த்தகம் தான் பிரதானம். ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் அதனை பல நாடுகளும் வாங்குவது இல்லை.

    Advertisement

    இருப்பினும் கூட ஈரான் தனது கச்சா எண்ணெய்யை பிற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் சென்றாலும் கூட அதனை எடுத்து செல்லும் கப்பல்கள் போலி அடையாளங்களுடன் கடலில் பயணிக்கும்.

    பிற நாடுகளின் அனுமதியின்றி அந்த நாட்டின் தேசியக்கொடிகளை கப்பல்கள் பயன்படுத்தி ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கு இந்திய தொழிலதிபர் தம்பதி உதவியதாக கூறப்படுகிறது. இந்த புகாரை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் தம்பதியான சுனில் குமார் சர்மா - ஜஸ்பிரித் ப்ரீத்தி சாஹித், அஸ்வனி குமார் திமாம்ன், ஐஸ்விந்தர் சிங் உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் தொடர்புடைய இந்திய நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதில் சுனில் குமார் சர்மா - ஜஸ்பிரித் ப்ரீத்தி சாஹித் சண்டிகரை சேர்ந்தவர். இவர்களுக்கு சொந்தமான ஆர்யாவர்த் ஷிப் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அஸ்வனி குமார் திமாம்மன் மற்றும் ஐஸ்விந்தர் சிங் ஆகியோர் இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் சுனில் குமார் சர்மா - ஜஸ்பிரித் ப்ரீத்தி சாஹித் தம்பதியுடன் அவர்கள் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 4 பேரும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

    அதேபோல் சுனில் குமார் சர்மா நிர்வாக இயக்குநராக இருக்கும் இந்தியாவின் ஓசியானிக் டெக்னாலஜிஸ், ஆர்யாவர்த் ஷிப் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், Precept டிரெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், பாலினேஷியா மேரிடைம் பிரைவேட் லிமிடெட், அலெக்சாரியா பின்சர்வ் பிரைவேட் லிமிடெட், அலெ
    க்சாரியா மீடியா மற்றும் என்டர்டெயின்மெயிண்ட் பிரைவேட் லிமிடட், விகார்போட்டிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியா மட்டுமின்றி துருக்கி நாட்டின் Fugo Ground Services Inc என்ற நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனம் ஈரானின் விமான துறைக்கு உதவி செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

    இதனை அமெரிக்காவின் கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ''அமெரிக்காவின் 'ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்' நடவடிக்கையின் கீழ் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் செயல்படுவோர் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பலமுறை அறிவித்து இருந்தோம். தரை, கடல், வான்வெளி பாதை வழியாக ஈரான் அரசுக்கு யாரெல்லாம் உதவுகின்றனர் என்பது எங்களுக்கு தெரியும். தற்போது அதனடிப்படை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்திய தம்பதி சுனில் குமார் சர்மா - ஜஸ்பிரித் ப்ரீத்தி சாஹித் தம்பதி கடந்த 2014ம் ஆண்டு முதல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் மற்றும் ஈரான் ஆதரவில் செயல்படும் கிளர்ச்சி படையினரின் கப்பல்களுக்கு போலியான கொடி மற்றும் பயண சான்று வழங்கி மோசடி செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.

    English Summary

    US Sanctions On Indian Couple and Their Companies due to helps Iran: The United States has abruptly imposed economic sanctions on four Indians—including a married couple who are businesspeople—as well as the companies associated with them, alleging that they facilitated Iran's crude oil trade.