ரஷ்யாவுக்கு ‘செக்’.. இந்தியா – சீனாவுக்கு 100% வரி விதிக்கும் டிரம்ப்? செனட்டில் நிறைவேறிய மசோதா

  • வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் நிறைவேறியது. இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    Advertisement

    உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்ளவில்லை. உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ஏற்கனவே ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    Advertisement

    இதனால் மீண்டும் ரஷ்யாவிற்கு செக் வைக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா, சீனாவிற்கு அதிகப்படியான வரிகளை டிரம்ப் விதித்தார். ஆனால் அந்த வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் நீக்கியது. இதனால் டிரம்ப் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

    அதாவது ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வகையிலும், ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய், கியாஸ் வாங்கும் டாப் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றமான செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026 என்ற பெயரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை Lindsey 0 Graham என்ற செனட் உறுப்பினர் முன்மொழிந்து இருந்தார். ஆனால் அவர் சமீபத்தில் இறந்ததால் தற்போது அவரது பெயர் இந்த மசோதாவிற்கு சூட்டடப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த மசோதா என்பது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களை அதிகம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் நம் நாடும், 3வது இடத்தில் அஜர்பைஜானும், 4வது இடத்தில் ஹங்கேரியும், 5வது இடத்தில் ஸ்லோவாகியா நாடும் உள்ளன. இதனால் இந்த 5 நாடுகளை குறிவைத்து டிரம்ப் 100 சதவீதம் வரை வரி விதிக்க இந்த மசோதா வழிவகுத்து கொடுக்கிறது. அதேபோல் இந்த மசோதா அமெரிக்காவின் எதிரியான ஈரானையும் முடக்கும் வகையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஈரானின் எனர்ஜி துறையில் முதலீடுகள் செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிக்காட்டுகிறது.

    Advertisement

    இந்த மசோதா செனட் சபையில் நிறைவேறி உள்ளது. அமெரிக்காவில் செனட் சபை என்பது மேல்சபையாகும். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணங்களில் இருந்து 2 செனட் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி மொத்தம் 100 பேர் செனட் உறுப்பினர்களாக இருப்பார்கள். தற்போது தாக்கலான இந்த மசோதாவிற்கு 86 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த மசோதா நிறைவேறி உள்ளது.

    இந்த மசோதாவின்படி ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் டாப் 5 நாடுகளை தேர்வு செய்து டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரிகளை விதிக்க முடியும். அப்படி பார்த்தால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகமாக வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள சீனா, இந்தியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 2 நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கி அதற்கு பதில் வழங்கும் பணத்தால் தான் ரஷ்யா போரை தொடருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது இருநாடுகளுக்கும் செக் வைக்க இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    English Summary

    Russia Sanctions Bill: The US Senate has passed a bill empowering President Donald Trump to impose tariffs of up to 100 percent on countries that purchase oil from Russia. This could pose a major problem for our country.