இந்தியாவிற்கு 100% வரி விதிப்பு நிறுத்தி வைப்பு..திடீரென்று மனம் மாறிய டிரம்ப்..பின்னணியில் ரஷ்ய டீல்

  • வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், கியாஸ் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரி விதிக்கும் என்று அறிவித்தது. இது நாளை முதல் நடைமுறைக்கு வர இருந்ததால் இந்தியா, சீனா கடுமையாக பாதிக்கும் நிலை வந்தது. ஆனால் இன்று திடீரென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரி விதிக்கும் நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளார். இதன் பின்னணிபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மீது 100% வரி விதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை டிரம்ப் தளர்த்தினார்.

    Advertisement

    இந்த முடிவு, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தியின் முக்கிய வாங்குபவர்களிடமிருந்து வரும் பொருட்களுக்கு 100% வரை வரி விதிக்கக்கூடிய நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது. டிரம்ப் அல்லது அவரது நிர்வாகம் மேலும் நடவடிக்கை அவசியம் என்று தீர்மானிக்கும் வரை இந்தத் தளர்வு நடைமுறையில் இருக்க இந்த உத்தரவு அனுமதிக்கிறது.

    Advertisement

    உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் நம் நாடும், சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

    இதனால் நம் நாட்டின் மீது டிரம்ப் கோபமடைந்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு இந்தியா தான் பணம் செலுத்துகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி நம் நாட்டுக்கு வரிகளும் விதித்தார்.

    அதன்பிறகு அந்த வரிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய், கியாஸ் வர்த்தகம் செய்யும் டாப் 5 நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக 'லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்ய தடை சட்டம் 2026' என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை அமெரிக்க அதிபரால் வரி விதிக்க முடியும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

    Advertisement

    இந்த சட்டம் அக்டோபர் 18 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவும், சீனாவும் தான் அதிகளவில் பாதிக்கப்படும் என்றும், இருநாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதற்காகவே டிரம்ப் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனால் நாளை முதல் நம் நாடு மட்டுமின்றி சீனாவும், 100 சதவீதம் வரை அமெரிக்காவின் வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலை வந்தது. இந்நிலையில் தான் இந்த சட்டத்தை திடீரென்று நிறுத்தி வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதுதொடர்பாக ஆவணத்தில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அப்போது டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ''அமெரிக்காவின் கிரஹாம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளின் பயன்பாட்டை நான் தள்ளுபடி செய்கிறேன்'' என்று அறிவித்தார்.

    Advertisement

    டொனால்ட் டிரம்ப் திடீரென்று இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து இருப்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால் தற்போது அமெரிக்காவில் டீசல் விலை அதிகரித்துள்ளது. நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் டீசல் விலையை கட்டுப்படுத்த டிரம்ப் முக்கிய முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்க முடிவு செய்தார். இதுதொடர்பாக ரஷ்யா - அமெரிக்கா இடையே டீல் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்கி கொண்டு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா - சீனாவிற்கு 100 சதவீத வரி விதித்தால் அது முரண்பாடாக இருககும். இதனால் தற்காலிகமாக 'லிண்ட்சே ஓ கிரஹாம்' சட்டத்தின்படி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு விதிக்கப்பட வேண்டிய 100 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

    English Summary

    US President Donald Trump had announced a 100 percent tariff on countries purchasing crude oil from Russia. As this measure was set to take effect starting tomorrow, it posed a significant threat to India and China. However, President Trump has now abruptly halted the implementation of this 100 percent tariff. Key details regarding the reasons behind this decision have since emerged.Just one day before the 100% tariff was set to be imposed on India, Trump eased the sanctions on Russian oil.