டிரம்ப் ஆடும் கேம்.. இந்தியாவுக்கு 100% வரை வரி.. அமெரிக்காவுக்கு மட்டும் விதிவிலக்கு.. சர்ச்சை!

  • வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா தொடர்ந்து யுரேனியம் வாங்கும் நிலையில், மற்ற நாடுகளுக்கு மட்டும் வரி விதிப்பது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    உக்ரைன் போர் பல ஆண்டுகளாக தொடரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயன்று வருகின்றன. இந்த போரினால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில், எப்படியாவது மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இதற்காக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

    Advertisement

    பொருளாதாரம்

    இதற்கிடையே ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க அமெரிக்கா சில புதிய வரிகளை கொண்டு வந்துள்ளது. அதாவது ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 100% வரை வரி விதிக்கும் அதிகாரம் டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க டிரம்புக்கு புதிய அதிகாரம் அளிக்கிறது. இதற்காக ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு தானாகவே 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அர்த்தமல்ல. டிரம்ப் நினைத்தால் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கலாம் என்பதே இந்த சட்டமாகும்!

    Advertisement

    அமெரிக்கா

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இந்த சட்டத்தை 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றியது. இதற்கு முன்னதாக செனட் சபையில் ஆகஸ்ட் மாதம் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அது அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு டிரம்ப் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார்

    ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளை முடக்கி, பொருளாதார ரீதியாக அதை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் அணுசக்தி துறையைப் பொறுத்தவரை அமெரிக்காவின் அணுகுமுறை முற்றிலும் வேறாக உள்ளது.

    Advertisement

    ரஷ்யா வர்த்தகம்

    ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் இறக்குமதிக்கு அமெரிக்கா ஏற்கனவே 2024ஆம் ஆண்டு சட்டம் மூலம் தடை விதித்துள்ளது. ஆனால் அந்த சட்டத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அமெரிக்க அணு உலைகள் அல்லது அணுசக்தி நிறுவனங்களின் செயல்பாட்டை தொடர மாற்று வழி இல்லாத சூழ்நிலையில், அல்லது நாட்டின் தேசிய நலனுக்காக அவசியம் என கருதினால், ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியும்.

    ரஷ்யாவின் அணுசக்தி எரிபொருள் விநியோகத்தை உடனடியாக மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தயாரிப்பில் யுரேனியம் மாற்றம், செறிவூட்டல் உள்ளிட்ட பல கட்டங்கள் உள்ளன. இந்த துறையில் ரஷ்யா மிக பெரிய செறிவூட்டல் திறனை கொண்டுள்ளது. அமெரிக்காவில் முன்பு பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் சுமார் 20 முதல் 25 சதவீதத்தை ரஷ்யாவே வழங்கி வந்தது.

    Advertisement

    இரட்டை நிலைப்பாடு

    சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் யுரேனியம் சப்ளையில் ரஷ்யா தவிர்க்கவே முடியாத இடத்தில் இருக்கிறது. அமெரிக்க அதிபரான டிரம்பிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதும், டிரம்ப் சமாளிக்கும் வகையிலேயே பதிலளித்திருந்தார். அதாவது அமெரிக்கா மட்டும் ரஷ்யாவில் இருந்து யுரேனியம் வாங்குமாம். அதற்கு எந்தவொரு வரியும் தடையும் இருக்காதாம். அதேநேரம் இந்தியா உட்பட மற்ற நாடுகள் தனது தேவைக்காக வாங்கினால் வரி விதிப்பார்களாம். அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாடே இப்போது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

    English Summary

    US has passed legislation giving President Donald Trump authority to impose tariffs of up to 100% on countries trading with Russia(அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்த விவாதம்): US Tariff Threat Russian Uranium Imports.