உலகின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் துப்பாக்கி சூடு.. அலறியடித்து கொண்டு ஓட்டம்! வீடியோ

  • வாஷிங்டன்: அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மக்கள் அதிகளவில் திரண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    உலகிலேயே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் ஒன்றாக டைம்ஸ் சதுக்கம் கருதப்படுகிறது. அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் ஒரு இடமாகவே டைம்ஸ் சதுக்கம் கருதப்படுகிறது. அந்தளவுக்கு உலகின் பரபரப்பான இடங்களில் ஒன்றில் திடீரென கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    துப்பாக்கிச் சூடு

    அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை மதியம் சுமார் 3:40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நியூயார்க்கின் இதய பகுதியான டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதனால் அங்குத் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அச்சமடைந்து, தங்களைக் காத்துக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், துப்பாக்கியால் சுட்டதாகக் கருதப்படும் நபரை உடனடியாக விரட்டிச் சென்று பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

    Advertisement

    என்ன நடந்தது!

    இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் டைம்ஸ் சதுக்கம் வழக்கத்தை விட அதிக கூட்டமாக இருந்தது. 53 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க் நிக்ஸ் அணி புகழ்பெற்ற என்பிஏ கூடைப்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைக் கொண்டாடும் வகையில் லோயர் மேன்ஹாட்டன் பகுதியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக அதிகப்படியான மக்கள் திரண்டிருந்தனர்.

    மேலும், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இப்போது அமெரிக்காவில் நடக்கும் சூழலில், அதைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் கடந்த ஒரு வாரமாக நியூயார்க்கில் தங்கியுள்ளனர். அவர்களும் அந்தப் பகுதியில் அதிகளவில் திரண்டிருந்தனர். இந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

    Advertisement

    பகீர்

    இதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்த தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அதில், துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதையும், பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் புகுவதையும் காண முடிகிறது. காவல்துறையினர் சந்தேக நபரைத் துரத்திச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, ஒரு காவல்துறை வாகனத்திற்கு மிக அருகிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முதல்முறை இல்லை

    அதேநேரம் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பது இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன்பும், அதாவது இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. நியூயார்க் நிக்ஸ் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மக்கள் திரண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் இந்தச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    A shooting incident at New York's Times Square injured one person during peak afternoon hours(அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கி சூடு): Times Square Shooting latest updates in tamil.