வெனிசுலாவின் எண்ணெயை கைப்பற்றும் அமெரிக்கா.. உலக வரலாற்றில் பெரிய ஒப்பந்தம்.. டிரம்பின் அறிவிப்பு

  • வாஷிங்டன்: உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான எண்ணெய் ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டு இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலா உலக அளவில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.

    Advertisement

    மொத்த எண்ணெய் வளத்தில் 17 சதவீதம் வெனிசுலாவிடம்தான் உள்ளது என சொல்லப்படும் நிலையில், அந்த நாட்டின் 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய்களை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    Advertisement

    65 பில்லியன் பேரல்கள்

    டிரம்ப் கூறியுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி வெனிசுலாவிடம் இருந்து 65 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் வரை எடுக்க கூடிய ஆற்றல் கொண்ட எண்ணெய் வயல்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என்று தெரிகிறது. வெனிசுலா பொறுப்பு அதிபர் ரோட்ரிகியூஸ் இதனை உறுதி செய்யும் விதமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது குறித்து ரோட்ரிகியூஸ் கூறியிருப்பதாவது:-

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த வயல்களில் மொத்தம் 6,500 கோடி பேரல் அளவுக்கு எண்ணெய் இருப்பு இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. ஒப்பந்தம் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் தொழிலில் சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு ஈர்க்கப்படும். இதன் மூலம் வெனிசுலா அரசுக்கு 2,090 கோடி அமெரிக்க டாலர் வரி வருவாய் கிடைக்கும். நமது நாடு மீண்டெழுவதற்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    வெனிசுலா அதிபர் நிகோலஸ்

    இந்த ஒப்பந்தம் தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் வயல்களை மேம்படுத்தி எண்ணெய் எடுத்துக்கொள்ள நிறுவனங்களுக்கு 100 ஆண்டுகள் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது' என்றார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை நாடு புகுந்து அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து தனது நாட்டு சிறையில் அடைத்தது. போதைப்பொருளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என கூறி அமெரிக்கா, இந்த நடவடிக்கையை எடுத்தது.

    இந்த சம்பவம் நடைபெற்று 9 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வெனிசுலாவுடன் மிகப்பெரிய அளவிலான எண்ணெய் ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போர் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத சூழல் நிலவி வரும் நிலையில், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அமெரிக்காவிலும் விலைவாசி கடுமையாக அதிகரித்து இருப்பதால் டிரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் உள்ள எண்ணெய் இருப்புகள் குறையத்தொடங்கிய நிலையில், டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு இருக்கும் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    US President Donald Trump has shared on his 'Truth' platform that the United States has entered into the largest oil deal in world history. The South American nation of Venezuela is one of the countries with the largest oil reserves in the world.