வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக எகனாமிக் டி டே ஆக்ஷன் பாயும் என்று டிரம்ப் எச்சரித்த மறுநாளே, அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசண்ட் புதிய எச்சரிக்க ஒன்றை விடுத்துள்ளார். ஈரானை பண மோசடி செய்ய அனுமதிக்கும் நாடுகள் அமெரிக்காவின் டாலர் அமைப்பில் இருந்தே நீக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுத்துக்கொண்டே செல்கிறது. இடைக்கால போர் நிறுத்தம் முடிவுகு வந்த பிறகு, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து இருப்பதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரானை பொருளாதார ரீதியில் முடக்கும் நோக்கில், அந்த நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையை எடுக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
'எகனாமிக் டி-டே' என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார். ஈரானும் இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று எச்சரித்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் ஈரானுடன் உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க கரூவூல செயலர் ஸ்காட் பெசண்ட் செய்தியாளர்கள் சந்திப்பில், ஈரானுடன் பண மோசடியில் ஈடுபடும் நாடுகளை அமெரிக்க டாலர் அமைப்பில் இருந்தே நீக்கி விடுவோம் என்று எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான அனைத்து வருவாய் ஆதாரங்களையும் முடக்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா, புதிய தடைகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய பெசண்ட் கூறியதாவது:- ஈரானின் வருவாய்க்கான அனைத்து ஆதாரங்களையும் முடக்கும் நோக்கில் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட உள்ளது. ஈரானுடனான பொருளாதார உறவுகளைத் துண்டிக்காத நாடுகளுக்கும் தடைகள் விதிக்கப்படும். ஈரானுக்கு எதிரான தடைகளில் இணையாத நாடுகள் ஈரானுடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்படும். நான் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். ஈரானின் சார்பில் பணமோசடிக்கு உதவும் எந்த வொரு நிறுவனமும் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை அமைப்பிலிருந்து நீக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டோம்" என்றார். பொருளாதார தடைகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த பெசண்ட், "ஈரானின் எண்ணெய்யை பணமாக மாற்ற உதவும் எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனம் எங்களின் இலக்காக மாறும்" என்று எச்சரித்துள்ளார். அமெரிக்கவின் இந்த புதிய எச்சரிக்கை ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒரு சொட்டு கூட ஏற்றுமதி கிடையாது
ஈரானுடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்படும்
கூடுதல் பதற்றம்