பெருசா ஏதோ நடக்கப்போகுது! ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்!

  • வாஷிங்டன்: பிரிட்டிஷ் விமானப்படை தளத்திலிருந்து அமெரிக்காவின் B-2 குண்டு வீச்சு விமானங்கள் திடீரென புறப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் தற்போது, ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்காவிடமிருந்து அவசர உத்தரவு வந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஈரானில் பெரிய சம்பவம் ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

    Advertisement

    ஈரானில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், எந்தவொரு காரணத்திற்காகவும் இனி அந்நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டாம் எ்னறும் அமெரிக்காவின் தூதரகம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    பாதுகாப்பு சூழல் சிக்கலாக இருப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்படலாம், வான்வெளிகள் மூடப்படலாம் அல்லது எல்லையை தாண்டுவதில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க ராணுவ மற்றும் கடல்சார் அழுத்தங்களை தொடர்ந்து அமெரிக்கா கொடுத்து வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானும் எச்சரித்துள்ளது.

    மறுபுறம் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் உள் கட்டமைப்புகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த ராணுவ மோதல் மிக வேகமாக தீவிரமடையும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது.

    Advertisement

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேயும் அமெரிக்க நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரானிய ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈரானில் உள்ள அமெரிக்கர்கள், விமான நிலையங்கள் மற்றும் எல்லை பகுதிகளில் நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    அவசரக் காலங்களில் தூதரக தொடர்பை பெற STEP திட்டத்தில் அமெரிக்கர்கள் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். அதேபோல மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போராட்டங்கள் மற்றும் அமெரிக்க தொடர்புடைய பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், ஜன்னல்களை விட்டு விலகி பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது.

    English Summary

    US warns citizens: B-2 bombers have suddenly taken off from a British airbase. At the same time, an urgent order has been issued by the US for all Americans currently in Iran to leave the country immediately. These developments have sparked fears that a major incident is about to unfold in Iran.