வந்த வேலை முடிந்தது! 23 ஆண்டுகள் ஆதிக்கம்.. ஈராக்கிலிருந்து வெளியேறும் அமெரிக்கா!

  • வாஷிங்டன்: ஈராக்கிலிருந்து தங்களுடைய ராணுவம் செப்.30க்குள் முழுமையாக வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய அதிபர் சதாம் உசேனை வீழ்த்தியதற்கு பிறகு, உடனே வெளியேறியிருக்க வேண்டிய அமெரிக்க படைகள் 23 ஆண்டுகள் டேரா போட்டு.. இப்போதுதான் வெளியேற இருக்கின்றன.

    Advertisement

    அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இன்று டிரம்ப் மற்றும் ஈராக் அதிபர் அலி அல்-சைதி ஆகியோருக்கு இடையே சந்திப்பு நடந்தது. இதன் பிறகுதான் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    Advertisement

    டிரம்ப் சொன்னது என்ன?

    இது குறித்து பேசிய டிரம்ப், "ஈராக்கில் இனி அமெரிக்க ராணுவத்தின் தேவை இருக்காது. ஈராக் மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளை கொண்ட நாடு. எனவே ராணுவ உறவுகளிலிருந்து விலகி இனி, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்த இருக்கின்றன. அமெரிக்க படைகள் வெளியேறி, அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் இனி ஈராக்கில் காலடி வைக்கும்" என்று கூறியிருக்கிறார். இதை ஈராக் அதிபரும் உறுதி செய்திருக்கிறார்.

    பிரச்சனை என்ன?

    என்னதான் அமெரிக்க படைகள் வெளியேறும் என்று டிரம்ப் சொன்னாலும், 23 ஆண்டுகள் ஈராக்கில் டேரா போட்டது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அமெரிக்க நிறுவனங்களை ஈராக் அரசு அனுமதிக்க வேண்டும், ஈராக்கில் உள்ள எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றி.. லாபம் பார்க்க வேண்டும். இந்த பிளான் நிறைவேறதான் 23 ஆண்டுகளாக.. அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படாமல் இருந்தன என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    பின்னணி என்ன?

    ஈராக்கில் கடந்த 2003ம் ஆண்டு சதாம் உசேன் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போரிட அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைந்தது. அதன் பின்னர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக களமிறங்கியிருந்தது அமெரிக்க ராணுவம். இப்படியாக 23 ஆண்டுகள் ஈராக்குக்குள் ஓட்டிவிட்ட நிலையில், இனி ஈராக்கில் எந்த வேலையும் இல்லை. பயங்கரவாதிகளை எதிர்க்கும் பணிகளை ஈராக் அதிரடி படைக்கு கை மாற்றிவிட்டோம் என்று கூறி, அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படுகின்றன.

    இது கூட டிரம்ப் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடையாது. முன்னாள் அதிபர் ஜோ படைன் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    US Withdraws from Iraq: US President Donald Trump has announced that American troops will fully withdraw from Iraq by September 30. US forces—which should have left immediately after ousting then-President Saddam Hussein in 2003—have remained stationed there for 23 years and are only now set to withdraw.