வாஷிங்டனில் பரபரப்பு: அமெரிக்காவில் ₹95 ஆயிரம்.. இந்தியாவில் வெறும் ₹950.. ஆச்சரியத்தில் உறைந்த பெண்

  • வாஷிங்டன்: அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் அதிகம் என்று அங்கு வாழும் இந்தியர்கள் எப்போதுமே சொல்வார்கள்.. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அங்கே நடந்துள்ளது.. காப்பீட்டு நிறுவனம் கைவிட்டதால் தவித்த அமெரிக்கப் பெண் ஒருவருக்கு, இந்திய மருந்து நிறுவனத்தின் தயாரிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வெறும் 6 மாத்திரைகளுக்கு 95,000 ரூபாய் பில் வந்த அதிர்ச்சியில் இருந்து, அவர் எப்படி எளிதாகத் தப்பினார் என்பதையும் பாதிக்கப்பட்ட பெண், வீடியோ போட்டு விரிவாக சொல்லி உள்ளார்..!!

    Advertisement

    அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லி கவலைப்படுவார்கள். அதாவது நமக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டால், அதுவரை கஷ்டப்பட்டு சம்பாதிச்ச மொத்த பணமும் காலியாகிடும் என்பார்கள்.

    Advertisement

    அமெரிக்காவில் மருத்துவ செலவு

    அதனால்தான் அங்குள்ளவர்கள் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை ரொம்பவே கவனமுடன் வாங்கிக்கொண்டு போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்...

    இதோ இப்போரு ஒரு சம்பவம் அங்கு நடந்து மொத்த பேரையும் கதிகலங்க வைத்துவிட்டது.. வெறும் 6 மாத்திரைகளுக்காக அமெரிக்க பெண் ஒருவருக்கு போடப்பட்ட பில் தொகையும், அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோவும்தான் இப்போது அமெரிக்க மருத்துவ அமைப்பின் முகத்திரையைக் கிழித்தெறிந்துள்ளது.

    6 மாத்திரைக்கு 95000 ரூபாய்

    அமெரிக்காவை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் விக்டோரியா.. இவருக்கு 6 மாத்திரைகள் தேவைப்பட்டுள்ளது. இதற்காக ஆர்டர் செய்து அந்த 6 மாத்திரைகளையும் வாங்கியிருக்கிறார்.. இதற்காக அவருக்கு வந்த பில் எவ்வளவு தெரியுமா? வெறும் 6 மாத்திரைகளுக்கு 1000 டாலர்கள், அதாவது நம்ம இந்திய மதிப்பில் சுமார் 95,000 ரூபாய் வரை பில் வந்துவிட்டதாம்.

    Advertisement

    இதை பற்றிதான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "டாக்டர் எனக்கு பரிந்துரைத்த மருந்திற்கு, மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் பணம் செலுத்த மறுத்துவிட்டது. அதனால் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள மருந்தை என்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக என்னுடைய டாக்டரை அணுகிய போது, அவர் கனடாவைச் சேர்ந்த மருந்தகத்திற்கு மருத்துவ பரிந்துரை சீட்டை அனுப்புமாறும், அந்த மருந்தகம் இந்திய மருந்து உற்பத்தியாளரிடம் இருந்து அதனைப் பெற்று தருவார்கள் என்றும் சொன்னார்.

    இந்தியாவின் புகழ் அமெரிக்காவில்

    அதன்படியே, நான் மருந்து சீட்டை இந்திய மருந்து கம்பெனிக்கு அனுப்பி வைத்தேன். இந்த மருந்தை வாங்க ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும் என்று எதிர்பார்த்தேன். அதைச் செலுத்தவும் நான் தயாராக இருந்தேன். ஆனால், கூரியர் அனுப்பும் செலவு உள்பட மொத்தம் ரூ.2400 ஆகும் என்று கூறினார்கள்.

    Advertisement

    இதனை கேட்டு நான் ஆச்சர்யப்பட்டு போனேன். கூரியர் கட்டணமான ரூ.1,450ஐ தவிர்த்து பார்த்தால் மருந்தின் விலை ரூ.950 மட்டும் தான். அமெரிக்காவில் சுகாதாரக் கட்டமைப்பு ஒரு காமெடியாக உள்ளது. நாம் முற்றிலும் ஏமாற்றப்படுகிறோம். இந்த மருந்திற்கு ரூ.95 ஆயிரம் செலவாகும் என்று சொல்கிறார்கள்.

    ஆனால், அதே மருந்தை இந்தியாவில் உள்ள உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றதால் வெறும் 950 ரூபாய்க்கு என்னால் வாங்க முடிந்துள்ளது. மிக அதிகமாக வசூலிக்கப்படும் பணம் யாருக்கு தான் செல்கிறது" என்று மிக ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அமெரிக்க மருத்துவக் கட்டமைப்பு தொடர்பாக நெட்டிசன்களிடையே பெரிய விவாதத்தையே கிளப்பி விட்டுள்ளது. அத்துடன் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் நம்ம இந்தியாவை பலரும் அங்கே பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்களாம்.!!

    English Summary

    Washington Unbelievable! A Medicine Costing ₹95000 in US is Just 950 rupees in India! Woman Left Amazed