வாஷிங்டன்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை பாதிக்கும் வகையில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் திட்டங்களை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, கிரீன் கார்டு பெறும் திட்டத்தில் இந்த நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
டிரம்ப் அரசு ஆட்சிக்கு வந்தது முதலே வெளிநாட்டு குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்ட விரோத குடியேற்றம், சட்டப்பூர்வ குடியேற்றம் என இரண்டிற்கு எதிராகவும் டிரம்ப் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் டிரம்ப் அரசு அதிரடியா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது வெளிநாட்டினரை அமெரிக்காவில் வேலைக்கு எடுக்கும் நடைமுறையில் தவறுகளை செய்ததாக சொல்லி பல்வேறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தன. இந்த நிறுவனங்களால் இனி அமெரிக்காவில் வெளிநாட்டினரை பணிக்கு எடுக்க முடியாது. இதில் 8 இந்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி கேப்ஜெமினி, மைக்ரோசாஃப்ட் மற்றும் அடோப் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளன. விசா நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்கள் மற்றும் விசாரணைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க தொழிலாளர் துறையின் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டமான PERMஇன் கீழ், இந்த நிறுவனங்களின் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் பிராசஸ் செய்யப்படுவதும் நிறுத்தப்படும் என்றும் தொழிலாளர் துறை செயலாளர் கீத் சாண்டர்லிங் தெரிவித்துள்ளார். மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தி, அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்புகளை பறித்தாக டிரம்ப் அரசு குற்றஞ்சாட்டியது. டிரம்ப் அரசு மேலும், "2009 முதல் இந்த நிறுவனங்கள் மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விண்ணப்பித்துள்ளன. மேலும், 2.30 லட்சத்துக்கும் அதிகமான எச்-1பி விசா ஒப்புதல்களையும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிரந்தர தொழிலாளர் சான்றிதழ்களையும் இந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன. வெளிநாட்டினரை பணிக்கு எடுத்துவிட்டு, அமெரிக்கர்களை வேலையை விட்டு நீக்குவதை இந்த நிறுவனங்கள் வாடிக்கையாக வைத்துள்ளன" என்றார். டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையில் 4 இந்திய ஐடி நிறுவனங்கள் சிக்கியுள்ளன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல காக்னிசன்ட் நிறுவனம் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதன் தலைமையகம் அமெரிக்காவில் இருந்தாலும், பெரும்பாலான ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட், அடோப் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ஜெமினி (இதிலும் இந்தியர்களே அதிகம் வேலை செய்கிறார்கள்) ஆகிய நிறுவனங்களும் இதில் சிக்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எச்-1பி விசா விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுடையவை என்பதால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய ஐடி ஊழியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த 8 நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் வேலை செய்யும் ஊழியர்களால் ஹெச்-1பி விசா பெற முடியாது. இதில் வேலை செய்யும் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு, விசா பிராசஸ் தொடங்கப்பட்டு இருந்தால் அதுவும் நிறுத்தப்படும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த 8 நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களால் அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற முடியாது!டிரம்ப் அரசு
நடவடிக்கை ஏன்
குற்றச்சாட்டு
எந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை