அமேசான் பிரைம் வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான்.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்

  • சென்னை: அமேசான் பிரைம் வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான். 1499 பே பண்ணாலும் எக்ஸ்ட்ரா 799 pay பண்ணனும் விளம்பரங்கள் இல்லாமல் பாக்க, அப்படி அதிலேயும் சில விளம்பரங்கள் வருது. எல்லாவற்றையும் விட கொடுமை Rental Basis ல நல்ல படம் எல்லாத்தையும் lock பண்ணி வெச்சி இருக்காங்க.. அமேசான் டெலிவரிக்கு கூட மோசம் என்று நெட்டிசன் ஒருவர் குமுறி உள்ளார்.

    Advertisement

    ஒடிடி வாங்கி வைத்துள்ள பலருக்கும் கடுப்பேற்றும் ஒரு ஓடிடி என்றால் அமேசன் பிரைம் தான். அமேசான் பிரைம் பயன்படுத்தும் வாடிக்கையாளர் பலர் அதன் சப்கிரிப்ஷன் முறை குறித்து கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஏனெனில் நெட்பிளிக்ஸ் ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லைவ் , ஆஹா, ஜீ 5 என்ன மற்ற எந்த ஓடிடிலையும் சப்ஸ்கிருப்ஷன் செய்தால் படங்கள் பார்க்க முடியும் . ஆனால் அமேசான் பிரைமில் மட்டும் சப்ஸ்கிரைப் செய்தால் கூட தனியாக திரும்பவும் படங்களை வாடகை ஆப்ஷனில் பார்க்க வேண்டிய நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நல்ல படங்களை தருவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Advertisement

    இது பற்றி பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், மிகவும் வீணான சந்தா எதுவென்றால், அது 'பிரைம்' (Prime) சந்தாதான். என்னிடம் வருடாந்திர பிரைம் சந்தா உள்ளது, அதோடு விளம்பரங்கள் வராமல் இருக்க கூடுதல் கட்டணமும் செலுத்துகிறேன். அப்படியிருந்தும் எனக்கு விளம்பரங்கள் வருகின்றன; இது எனக்குப் புரியவே இல்லை. மேலும், 'கோல்ட் மைன்' (Gold Mine) திரைப்படங்களுக்காகத் தனிச் சந்தா எடுத்திருக்கிறேன். ஆனால், நல்ல திரைப்படங்கள் எதையும் இலவசமாகப் பார்க்க முடிவதில்லை; பெரும்பாலான படங்களுக்குத் தனித்தனியாகப் பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டியிருக்கிறது. இனி, சாதாரண ஷாப்பிங் விஷயத்திற்கு வருவோம். நானும் என் காதலனும் அமேசான் (Amazon) தளத்தைப் பயன்படுத்துகிறோம்.

    Advertisement

    இருவரது கணக்குகளிலும் ஒரே முகவரிதான் உள்ளது. ஆனால், பிரைம் சந்தா இல்லாத கணக்கில் டெலிவரி தேதி நவம்பர் 7-ஆம் தேதி என்று காட்டுகிறது (இதுவும் இலவச டெலிவரிதான்). அதாவது, பிரைம் சந்தா இல்லாமலேயே எனக்கு டெலிவரி விரைவாகக் கிடைக்கிறது, ஆனால் பிரைம் சந்தா வைத்திருக்கும்போது டெலிவரி தாமதமாகிறது!

    அப்படியென்றால், இந்தச் சந்தாவால் என்ன பயன்? ஒரு பிரைம் உறுப்பினராக, எனக்கு டெலிவரி விரைவாகக் கிடைக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பேன்? இது என்ன நியாயம், அமேசான்?" இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஜியோ ஹாட்ஸ்டார் விளம்பரங்களை போட்டு கடுப்பேற்றுவது ஒருபுறம் எனில், மற்ற ஓடிடிகளும் அந்த மாதிரி விளம்பரங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளன. netflix மட்டும் தான் சந்தாதாரர்களுக்கு நேர்மையாக இருக்கிறது. ஆனால் அமேசான் பிரைம் விளம்பரங்கள் போடுவது ஒரு புறம் எனில், பல படங்களை பூட்டு போட்டு லாக் செய்து வைத்திருக்கிறது இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Topics: #amazon #jio

    English Summary

    "Those who have Amazon Prime are truly to be pitied. Even after paying 1,499, you have to shell out an additional 799 to watch content without ads—and even then, some ads still appear! Worst of all, they’ve locked all the good movies behind a 'rental' paywall. Honestly, it’s even worse than their delivery service," lamented a netizen.