சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த 'கர' திரைப்படம், தியேட்டரில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் ஏமாற்றமளித்த நிலையில், தற்போது ஓடிடியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராகி உள்ளது.
'போர் தொழில்' போன்ற தரமான திரில்லர் படத்தை கொடுத்து கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான படம் என்பதால், 'கர' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய ஹைப் பெற்றிருந்தது. அதோடு தனுஷ் கதாநாயகனாக நடித்தது, அவருக்கு ஜோடியாக இளம் சென்சேஷன் மமிதா பைஜு நடித்தது, இசைக்கு ஜிவி பிரகாஷ் குமார் இருந்தது என படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் கே.எஸ்.ரவிக்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட அனுபவம் மிக்க நடிகர்களும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்த படம், 100 கோடி வசூல் கிளப்பும் என பலரும் கணித்திருந்தனர். ஆனால் படம் வெளியான பிறகு நிலைமை தலைகீழானது. ஆரம்ப ஹைப் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய அளவில் connect ஆகவில்லை. குறிப்பாக மந்தமான திரைக்கதை மற்றும் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இல்லாத கதையம்சம் காரணமாக, படம் தியேட்டர்களில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, 'கர' திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.53 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் அதிக வசூல் கிடைத்தாலும், தனுஷ் படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட பெரிய வெற்றியாக இது அமையவில்லை. இதனால் இந்த படம் தனுஷின் சமீபத்திய ஏமாற்றங்களில் ஒன்றாகவே பேசப்பட்டது. ஆனால் தியேட்டரில் ஏமாற்றமளித்த பல படங்கள் ஓடிடியில் மாஸ் காட்டிய வரலாறு ஏராளம். அந்த பட்டியலில் 'கர' சேருமா என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்திருக்கிறது. அதன்படி, 'கர' திரைப்படம் வரும் மே 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. சில படங்கள் தியேட்டரில் தோற்றாலும், வீட்டில் குடும்பத்துடன் பார்க்கும்போது நல்ல வரவேற்பைப் பெறும். அதேபோல தனுஷின் 'கர'க்கும் ஓடிடியில் ரசிகர்கள் புதிய தீர்ப்பு கொடுப்பார்களா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள், ஓடிடியில் இந்த படத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறீங்களா?கர படத்தின் பின்னணி
வசூலில் ஏமாற்றம்
கர படத்தின் ஓடிடி அப்டேட்