சென்னை: வார இறுதி வந்தாலே குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து ஒரு நல்ல படம் பார்க்க வேண்டும் என்பதுதான் பலரின் திட்டமாக இருக்கும். "இந்த வாரம் OTT-யில் என்ன புதுசு?" என்று தேடுபவர்களுக்காக, இந்த வாரம் அதிகம் பேசப்படும் முக்கிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியல் இதோ.
அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'பிளாஸ்ட்' படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு தற்போது Netflix-ல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன், சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் என கமர்ஷியல் ரசிகர்களுக்கான முழுமையான பொழுதுபோக்கு படம். ஜேம்ஸ் கேமரூனின் உலகப் புகழ்பெற்ற Avatar தொடரின் புதிய பாகம். பாண்டோராவின் புதிய உலகம், பிரம்மாண்டமான VFX, அதிரடி காட்சிகள் என ஹாலிவுட் ரசிகர்கள் தவறவிடக் கூடாத திரைப்படம். ஷேன் நிகாம் நடித்துள்ள மலையாள கிரைம் த்ரில்லர். புதிதாக பொறுப்பேற்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை வழக்கை விசாரிக்கும் கதை. சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு ஏற்ற படம். இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. 4. Squid Game - Season 3 உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த Squid Game தொடரின் புதிய சீசன் தற்போது Netflix-ல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பாக நகர்வதால் இந்த வாரம் அதிகம் ட்ரெண்டாகும் சீரிஸ்களில் இதுவும் ஒன்று. பல விருதுகளை வென்ற இந்த ஹாலிவுட் வெப் சீரிஸின் புதிய சீசன் வெளியாகியுள்ளது. குடும்பம், சமையல் உலகம், எமோஷனல், அழுத்தம் என வித்தியாசமான கதையை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு. இந்த சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது குடும்பம், அதிகாரம், குற்றம், துரோகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய ஆங்கில வெப் சீரிஸ். கிரைம் டிராமா netflix இல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபல நாவலை மையமாகக் கொண்டு உருவான இந்த சஸ்பென்ஸ் சீரிஸ், மர்மங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது இப்போது அமேசான் பிரைமில் கிடைக்கிறது. வீக்கெண்டை வீட்டிலேயே ஜாலியாக கழிக்க நினைத்தால், இந்த OTT வெளியீடுகள் உங்கள் வாட்ச் லிஸ்ட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை. ஆக்ஷன் முதல் கிரைம், ஹாலிவுட் முதல் மலையாளம் வரை அனைத்து வகை ரசிகர்களுக்கும் இந்த வாரம் நல்ல தேர்வுகள் காத்திருக்கின்றன.1. பிளாஸ்ட்
2. Avatar: Fire and Ash
3. ட்ரிடம் (Dridam)
5. The Bear - Season 4
6. The Waterfront
7. We Were Liars
இந்த வாரம் எதை பார்க்கலாம்?